சமீபத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்து திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் வேலைக்காரன்.படம் நல்ல விமர்சனங்களை பெற்று நல்ல வசூல் புரிந்துவருகிறது.படத்திற்கு கிடைத்த வரவேற்பில் படக்குழு அனைவரும் சந்தோசமாக இருக்க ஒரே ஒருவர் மட்டும் வருத்தத்தில் உள்ளார்.அது வேறு யாரும் அல்ல நம் புன்னகை அரசி சினேஹா தான்.படத்தில் அவர் வரும் காட்சிகள் வெறும் 5 நிமிடங்கள் தான் என்பதால் அவர் கடும் கோபத்தில் உள்ளார்.

இதில் அவர் வரும் அந்த 5 நிமிட காட்சிக்காக பெருமளவில் எடையை குறைத்துள்ளார்.18 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு சினேகாவிற்கு மட்டும் நடந்துள்ள நிலையில் படத்தில் 5 நிமிடங்கள் தான் எனது காட்சி இடம் பெற்றுள்ளது.படத்திற்காக நான் பட்ட கஷ்டம் படத்தில் தெரியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது என்றார் சினேகா.

இதை தெரிந்துகொண்ட படத்தின் இயக்குனர் மோகன் ராஜா,சினேகாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.மேலும் அவர் கூறுகையில் இந்த படத்தை பொறுத்த வரை சினேகா கதாபாத்திரம் தான் அதிகமாக பேசப்படுகிறது.அவர் இந்த படத்திற்காக கஷ்டப்பட்டது தெரியும்.இருந்தாலும் சினேகா நாங்கள் தவறு செய்ததாக நினைத்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார் இயக்குனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here