80 களில் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றியதற்குப் பிறகு, கஹோ நா… பியார் ஹே (2000) என்னும் திரைப்படத்தில் ஹிரித்திக் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதுடன் இதில் ரோஷனின் நடிப்பு அவருக்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த அறிமுக ஆண் நடிகர் ஆகிய ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றுத்தந்தது.

இவர் சிறந்த நடிகருக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். அந்த அளவிற்கு இவர் பாலிவுட் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தையும் வைத்திருப்பவர்.

பாலிவுட் படங்களில் ஒரு சிலர் மட்டுமே தனது படங்களுக்காக உடலை வருத்தி மெனக்கெட்டு தோற்றத்தை மாற்றி நடிப்பதில் வல்லவர்கள். அவர்களில் ஒருவராக எப்பொழுதும் இருப்பவர் ஹிரித்திக் ரோஷன்.

இருந்தாலும் கடந்த சில படங்கள் அவர் எதிர் பார்த்த படி நன்றாக போகாத காரணத்தால் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார் . இந்நிலையில், தற்போது சூப்பர்-30 என்ற ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். மேலும் கிறிஸ் படத்தின் நான்காவது பாகத்திலும் நடித்து வருகிறார் ஹிர்திக்.

சூப்பர்-30 படத்திற்காக மிகவும் வயதான தோற்றத்தில் நடிக்க உள்ளார் ஹிர்திக். இதற்காக தனது உடல் எடையை மிகவும் குறைத்துள்ளார். அந்த படத்தில் நடிக்கவும் ஹிர்த்திக்கின் புகைப்பிடம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிர்திக் ரோஷனுக்கும் மனைவி சூசன்னா கானுக்கும் விவாகரத்து ஆகி மீண்டும் அவர்களது திருமணம் வாழ்க்கையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here