கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் மணிவண்ணன்.  இவர் தனது நடிப்பின் திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி நண்பர் ஆவார், சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.

இன்னும் சில காலம் இந்த நடிகர் நம்முடன் இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கும் நடிகர்களில் ஒருவர் மணிவண்ணன். 1983ஆம் ஆண்டு ஜோதி என்ற ஒரு படத்தின் மூலம் இயக்குராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் 1984ஆம் ஆண்டு ‘நூறாவது நாள்’ என்கிற ஒரு செம்ம படத்தினை இயக்கி தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பினார். இயக்கம் மட்டுமில்லாது நடிப்பிலும் அசாத்திய திறமை பெற்றவர் மணிவண்ணன்.

இவர் முதன் முதலாக வில்லனாக 1989 ஆம் ஆண்டு நடித்தார் இவர் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து குறிப்பிடத்தக்கது . 1994ஆம் ஆண்டு வெளிவந்த அமைதிப்படை என்ற ஒரு அரசியல் படத்தின் மூலம் தனது அரசியல் ஞானத்தையும் காட்டினார்.

மணிவண்ணனுக்கு இரண்டு குழந்தைகள் ஒரு மகள் மற்றும் மகன் . மகனின் பெயர் ரகுவண்ணன். இவர் நடிகர் விக்ராந்த நடித்த கோரிப்பாளையம் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருப்பார்.

2002ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த மாறன் படத்தில் சத்திராஜுக்கு மகனாக நடித்திருப்பார். தற்போது தனது அப்பாவின் இயக்கத்தில் வெளிவந்த நூறாவது நாள் படத்தினை மீண்டும் இயக்கி வருகிறார்.

அவரது பிரிவு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு தான். அவரது மகன் அவரது இடத்தை நிரப்புவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here