பரத் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் நடித்து கொண்டிருக்கும் நடிகராவார்  . இவர் 2003-ம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.பின்பு காதல், செல்லமே, வெயில் திரைப்படங்கள் மூலம் பிரபலமானார்

இவர் இதுவரை தமிழில் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.நடிகர் பரத் 1984ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர். பரத்திற்கு ஒரு தங்கை இருக்கிறார். அவருடைய பெயர் ப்ரீத்தி.

ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நடனத்தில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் , ஒரு சர்வதேச டான்ஸ் ஸ்கூலில் சேர்ந்து டான்ஸ் கற்றுக்கொண்டார். மலையாளத்தில் இவர் நடித்த ‘தி 4 பீப்பில்’ படம் 2004ல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது.

இவருக்கு ஜெஸ்லி ஜோஸ்வா என்கிற மனைவி உள்ளார். இவர் பரத்தின் சிறு வயது நண்பராவார் . ஜெஸ்லி துபாயில் பிறந்தவர். அங்கு படித்து பட்டம் பெற்ற ஒரு பல் மருத்துவர் ஆவார். சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திர பல் மருத்துவ கல்லூரியில் படிக்க வந்த ஜெஸ்லியை பரத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார் அவரது நண்பர்.

இருவரும்  சில ஆண்டுகள் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர் ஆனால்  கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர் .ஆனால் இருவரும் வேறு மதத்தை சார்ந்தவர்கள் . திருமணத்திற்கு பின்பும் கூட நான் படிப்பேன் என ஸ்ட்ரிட்டாக சொல்லிவிட்டார் ஜெஸ்லி.

பரத் தற்போது சிம்பா, காளிதாஸ் மற்றும் போட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இருவரும் தற்போது குழந்தை வேண்டாம் என இருக்கின்றனர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here