தமிழ் திரை உலகில் பல பிரபலங்கள் பந்தா காட்டிக்கொண்டு சுத்தினாலும், ஒரு சிலரின் செயல் நம் மனதை நெகிழ வைத்து விடுகிறது. கடந்த சில மாதங்களாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் லிஸ்டில் வடிவேலு முன்னிலை வகித்து வந்தார்.

தமிழ் சினிமாவில், கொடி கட்டிப் பறந்தாலும் தனது மகனை ஒரு ஏழை பெண்ணிற்கு திருமணம் முடித்து வைத்தார். கடந்த சட்டசபை எலெக்க்ஷனில் ஏற்பட்ட சில இன்னல்களால்  சினிமாவில் இருந்து ஓரங்கட்டபட்டாலும் இன்றும், தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துள்ளார்.

ஏழ்மையில் பல சிரமங்களை சந்தித்தவர் நடிகர் வடிவேலு. சினிமா மூலம் வசதியான வாழ்க்கை அமைந்த பிறகும், தன் சொந்த ஊர், உறவுகளுடனான தொடர்பில் அவர் விலகவில்லை. அதற்கமையவே அவரின் மகனின் திருமணமும் அமைந்தது. இந்த நிலையில் வடிவேலுவின் பாணியில் தற்போது நடிகர் சூர்யா குடும்பம் செய்த காரியம் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது.

நடிகர் சூர்யாவின் அலுவலக உதவியாளர் முருகனின் திருமணம் திருப்பதியில் நடந்தது. திருமணத்தில் குடும்பத்துடன் பங்கேற்று, திருமணத்தையும் நடத்தி வைத்தது நடிகர் சூர்யா.

இதற்காக சூர்யா குடும்பமே ஒருநாள் முழுவதும் திருப்பதியில் இருந்தது.திருமணத்துக்கான அனைத்துச் செலவுகளையும் நடிகர் சூர்யாவே ஏற்றார். ‘திருமணச் செலவுதான் செய்கிறோமே’ என்பதுடன் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை.

மண்டபத்தில் திருமண வேலைகளையும் நடிகர் சூர்யாவே முன்னின்று செய்தார். சூர்யா பட்டு வேட்டி, சட்டை அணிந்தும். ஜோதிகா, பச்சை வண்ணத்தில் சேலையும் அணிந்து திருமணத்தில் உற்சாகமாகக் காணப்பட்டனர்.

மணமேடையில் சூர்யாவும் ஜோதிகாவும் சந்தோஷமாக உரையாடியதோடு, மணமக்கள் முருகன் – கோவிந்தம்மாளையும் உற்சாகப்படுத்தியது திருமணத்தில் பங்கேற்றவர்களை ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது.

நடிகர் சிவக்குமார், முருகனிடம் தாலியை எடுத்துக் கொடுக்க, அவர் மணமகள் கழுத்தில் கட்டினார். ஒருநாளுக்கே பல லட்சம் சம்பளம் பெறும் நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் தங்களிடம் பணி புரியும் ஊழியரின் திருமணத்துக்குச் செல்ல நேரம் ஒதுக்கியதோடு முன்னின்றும் நடத்தியது சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here