தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஆர்யா, ‘அறிந்தும் அறியாமலும்’ படம் மூலம் அறிமுகமானார். நான் கடவுள், மதராச பட்டணம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை, ராஜா ராணி, கடம்பன் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

ஆர்யாவுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன. நயன்தாராவுடனும் இணைத்து பேசப்பட்டார். இந்த நிலையில் திருமணத்துக்கு பெண் தேடுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தினார்.  ஆனால் அது  உண்மையில் எதற்கு என  இப்போது வெளிவந்துள்ளது.

வீட்டிலோ அல்லது காதலித்தோ திருமணம் செய்துகொள்ளும் சினிமா பிரபலங்கள் மத்தியில், ‘நான் திருமணம் செய்து கொள்ள பெண் தேடுகிறேன் விருப்பம் உள்ளவர்கள் இந்த நம்பருக்கு கால் செய்யுங்கள்’ என்ற அறிவிப்பை வெளியிட்டு, பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் நடிகர் ஆர்யா.

ஆனால் அதில் இப்படியொரு ட்விஸ்ட் இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி என்ன ட்விஸ்ட் என்றால், இந்த ஐடியாவை ஆர்யாவிற்கு கொடுத்தது ‘கலர்ஸ்’ எனும் புதிதாக களம் காண இருக்கும் டிவி சேனல் ஒன்றுதானம். மேலும் ஆர்யாவிற்கு பொருத்தமான பெண் தேடும் படலத்தை ‘எங்கள் வீட்டு மாப்பிளை’ என்ற நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பப் போகிறார்களாம்.

அதாவது ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து, போன் செய்த பெண்கள் அனைவரையும் வைத்து ரியாலிட்டி ஷோ போல நடத்த இருப்பதாகவும், மேலும் அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறும்  பெண் ஆர்யாவை திருமணம் செய்து கொள்வார் எனவும் தெரிகிறது.

என்ன ஒரு புத்திசாலி தனம்! திருமணம் செய்துகொள்ள ஆர்யாவிற்கு நல்ல பெண் கிடைத்த மாதிரியும் ஆச்சு! TRP ஏத்த ஒரு நிகழ்ச்சி கிடைச்ச மாதிரியும் ஆச்சு!.

\Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here