தென் ஆப்பிரிக்கா – இந்தியா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்தியா வென்றது.நேற்று நடைப்பெற்ற நான்காவது போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.தவானின் சதம் மற்றும் கோஹ்லியில் அரைசதம் இந்திய அணிக்கு கைகொடுக்க, அந்த அணி 300 ஓட்டங்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், கடைசி நேரத்தில் வந்த வீரர்கள் அதிகளவில் ஓட்டங்கள் குவிக்க தவறியதால் இந்தியா 289 ஓட்டங்களே எடுத்தது.

ஒவ்வொரு பிரதான அணிக்கும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடும் ஆட்டக்காரர்கள் உள்ளனர்.அவர்கள் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடுவதன் மூலம் அணியின் ஸ்கோர் உயரும்.ஆனால் இந்திய அணிக்கு அப்படிப்பட்ட ஆட்டக்காரர்கள் இல்லாததே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் ஆகும்.

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் முன்னால் கேப்டன் தோனியின் ஆட்டம் மிகவும் மந்தமாக இருந்தது இதுகுறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த ஓட்டங்களை எளிதாக எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.இந்நிலையில் டோனி 43 பந்தில் 42 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் அவர் இன்னும் கொஞ்சம் விரைவாக ஓட்டங்களை சேர்த்திருக்க வேண்டும் என ரசிகர்கள் டுவிட்டரில் கூறி வருகின்றனர்.

இருந்தாலும் ஆடுகளம்  மழைக்கு சாதகமாக அமைந்ததால் ஆட்டம் நம் கையை விட்டு போனது . மற்றும் இதர அணி வீரர்கள் பந்து வீச்சில் நன்றாக கவனம் செலுத்தியிருக்க வேண்டும் . இப்படி இருக்கையில் தோனியை மட்டும் குறை கூறுவது அடி முட்டாள் தனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here