துள்ளுவதோ இளமை 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தனுஷ் நடித்த இப்படத்தை கஸ்தூரிராஜா இயக்கினார். செல்வராகவன் திரைக்கதை எழுதிய இப்படம் தனுஷின் முதல் படமாகும். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு  திறமையான இயக்குனர் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் கிடைத்தனர்.

நடிகர் தனுஷ் இந்த படத்தில் அறிமுகமானார், அதுமட்டுமல்லாமல் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கும் இந்த படம் மாற்றத்தை கொடுத்தது. இந்த படத்தில் நடிக்கும்போது நடிகர் தனுஷிற்கு 16 வயதென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நாயகியாக அந்த படத்தில் அறிமுகமானவர் ஷெரின். அப்படம் வெற்றியடைந்தாலும் ஷெரினுக்கு பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை.பின்னர் நிறைய விளம்பர படங்களில்  நடித்த இவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தும் சரியான கதையம்சம் இல்லாததால் நடிக்க மறுத்துவிட்டார்.

பின்னர், வெளிமாநிலங்களுக்கு சென்று மற்ற மொழிப்படங்களில் நடிக்க முடிவு செய்து அங்கே சென்றும் சரியான பட வாய்ப்புகள் இல்லை.

அதனால் தமிழ்நாட்டிற்கே திரும்பி வந்துவிட்டார் ஷெரின்.சற்று குண்டாகவும் மாறிவிட்ட அவர் அதனைக் குறைக்க ஆயுர்வேத மசாஜ் மூலம் தன்னை சின்ன இளமையான பெண் போல மாற்றிக்கொண்டார்.

மேலும், அவரை பல வித போஸ்களில் போட்டோ எடுத்து பல படக் கம்பெனிகளுக்கு அனுப்பி வாய்ப்புகள் தேடினார்.

பின்னர் பல லோக்கல் விளம்பர வாய்ப்புகள் வந்தும் அதனையும் ஒதுக்கிவிட்டார். இதனால் எந்த வாய்ப்பும் இல்லாததால் சினிமாவிற்கு முழுக்கு போட்டார்.தற்போது ஒரு திகில் படத்தில் நடித்து வரும் அவர். சில செல்ஃபிக்களை எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த செல்ஃபிக்களை பார்த்தால் ஷெரின் தானா இது என்னும் அளவிற்கு உள்ளது.

இவரது தற்போதைய புகைப்படங்கள்:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here