தமிழில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ள அனைவரையும் பேச வைத்தது . மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரது வாழ்க்கையிலும் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியானது மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து வந்தது . முதன் முதலில் ஹிந்தியில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் இப்பொழுது 11 சீசன் முடிந்து அடுத்த பகுதிக்காக அனைவரும் காத்து கிடக்கின்றனர் . இப்படி 11ஆவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிந்தது.

இதில் சல்மான் கான் நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்றார் . தமிழில் தவறு செய்பவர்களை கமல்ஹாசன் அடக்குவதை போல் ஹிந்தியில் சல்மான் கான்  இரண்டு மடங்கில்  தனது வேலையை சரியாக பார்ப்பவர் .

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிலருக்கு நல்ல நட்பு, காதல் ஏற்படுமோ இல்லையோ கண்டிப்பாக விரோதமும் கோவமும் தான் அதிகமாக உண்டாகும் . இப்படி இதற்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் தற்போது திருமண அறிவிப்பை தெரிவித்துள்ளனர் .

நடிகர்கள் அஷ்மித் படேல் மற்றும் மாஹெக் சாஹால் ஆகியோர் வட இந்தியாவில்   அனைவருக்கும் தெரிந்த முகங்கள் ஆவர் . இவர்கள் ஹிந்தி பிக் பாஸ் மூலம் பெரும் புகழ் அடைந்தவர்கள் ஆகும்

jai ho மூலம் அஷ்மித் அனைவராலும் அறியப்பட்டவர் . அதே வேளையில் மகேக் வான்டட் போன்ற படங்களில் அறிமுகமானார் அதே போல்  மாஹெக் wanted மற்றும்  முட்ட பஜ்ஜி போன்ற படங்களின் மூலம் அறிமுகமானவர் .

இவர்கள் இருவரும் பிக் பாஸ் நான்காவது மற்றும் 5 ஆவது சீசன்கலீல் பங்கு பெற்றவர்கள் ஆவர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் டேட்டிங் செய்து கொண்டிருக்கும் இந்த இரு நட்சத்திரங்களும் இந்த ஆண்டு லண்டனில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அஷ்மிட் மஹேக்கை ஒரு சில மாதங்களுக்கு முன்னர் திருமணத்திற்கான விருப்பதை தெரிவித்ததாக  கூறப்படுகிறது, மற்றும் சூப்பர் திறமையான நடிகர் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here