நடிகர் விஜய் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் மெர்சல். வெளிவருவதற்கு முன்பு, வெளிவந்த பின்பு என பல சர்ச்சைகளில் சிக்கினாலும் பாக்ஸ் ஆஃபிசை பதற வைத்தது மெர்சல். படத்தின் மொத்த வசூல் 250 கோடி என்று இறுதிகட்ட கணக்கை முடித்து மெர்சல் தயாரிப்பு நிறுவனம்.இதனை தொடர்ந்து நடிகர் விஜய் – முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக தளபதி62 படத்தில் இணைகிறது.

இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.மேலும் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்நிலையில், மெர்சல் படத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சிறிய வருத்தம் இருந்தது. தொடர்ந்து தனது படங்களில் தனது குரலில் ஒரு பாடலை பாடி வந்த விஜய் மெர்சல் படத்தில் ஏனோ எந்த பாடலையும் பாடவில்லை. ஆனால், தளபதி 62-வில் விஜய் குரலில் ஒரு பாடல் இருந்தே ஆகணும் என்றும் எக்காரணம் கொண்டும் இந்த தடவை மிஸ் ஆக கூடாது என்று சமூக வளைத்தளங்கள் மூலமாக படகுழுவிற்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவான கத்தி, துப்பாக்கி என இரண்டு படத்திலும் நடிகர் விஜய் தலா ஒரு பாடலை பாடியிருந்தார். இரண்டு பாடல்களும் ஹிட் அடித்தன. இந்நிலையில், தளபதி 62 படத்தில் விஜய் நிச்சயம் ஒரு பாடலை பாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here