விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பரவலாக கவனம் ஈர்த்த தீனா தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான மலையாளப் படம் ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’ . நதீர்ஷா இயக்கத்தில் விஷ்ணு உன்னிகிருஷ்ணன், பிரயாகா நடிப்பில் வெளிவந்த இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தீனா கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். தீனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். ‘ப.பாண்டி’ படத்தில் தனுஷ் நண்பராக நடித்திருக்கிறார். தற்போது தனுஷ் மூலம் கதாநாயகன் ஆகும் வாய்ப்பு தினேஷுக்கு கிடைத்திருக்கிறது.

இந்த படத்தில் கலக்க போவது யாரு புகழ் தீனா நாயகனாக அறிமுகமாக உள்ளார், இந்நிலையில் தற்போது படத்தின் டைட்டிலில் தல அஜித்தின் பெயர் இடம் பெற்று உள்ளதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனால் பலரும் இந்த டைட்டிலை ஷேர் செய்து வாழ்த்து கூறி ப்ரோமோஷன் செய்து வருகின்றனர், மேலும் இது மெகா ஹிட் படத்தின் ரிமேக் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here