கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஒரு போராட்டம்.தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவையே என்னவென்று நோக்கசெய்த ஒரு போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம்.இந்த போராட்டத்தின்பொது பல திரையுலக பிரபலங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தனர்.சுதந்திரம் பெற்ற பிறகு, கடந்த 2017-ம் வருடம் ஜனவரி மாதம் வரலாறு காணாத போராட்டம் ஒன்று தமிழகம் முழுதும் நடந்தது.

ஜல்லிக்கட்டு போட்டிகள் மீதான தடையை நீக்கி தமிழர்களின் கலாச்சாரத்தையும் , அழிந்து வரும் நாட்டு மாடுகளை காக்கவும் தமிழகம் முழுதும் மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போரட்டங்களின் போது பல சினிமா நட்சத்திரங்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். பலர் போராட்டங்களில் நேரடியாக கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை கொடுத்தனர். இதில், ஒட்டுமொத்த தமிழகத்தையும் கிடுகிடுக்கவைத்தது நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோ.

இந்நிலையில், ஜல்லிகட்டை மையப்படுத்தி வெளியாகும் மதுரவீரன் படத்தில் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் குறித்த காட்சிகள் இடம் பெறவுள்ளன. அதில் முக்கியமாக, நடிகர் விஜய் பேசிய இந்த வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. செல்ஃபோன், தொலைக்காட்சி, மற்றும் கணினி திரைகளில் நீங்கள் பார்த்த இந்த வீடியோவை வெள்ளித்திரையிலும் பார்க்கலாம். இது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here