2003 வெளியான திரைப்படம் ஜே ஜே . இத்திரைப்படத்தினை சரண் இயக்கியிருந்தார். மாதவன், பூஜா, பிரியங்கா கோதாரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு பரத்வராஜ் இசையமைத்திருந்தார். இந்த படம்  அந்த கால இளசுகள் மனதில் பெரிய இடம் பிடித்தது. பாடல்கள்  இன்றுவரை   இளசுகள் காதுகளில் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறது.

ஜே.ஜே. இந்த படத்தில் மாதவனுக்கு நாயகியாக நடித்தவர் தான் பிரியங்கா கோத்தாரி என்ற அமோகா. இவர் 1983ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் பிறந்தவர்.

இவர் நடிக்க வருவதற்கு முன்னரே சினிமா மீது மிகுந்த காதல் கொண்டிருந்தார் இதனால் ஹிந்தியில் ஒரு பாடலுக்கு நடித்திருந்தார். அதன் பின்னர் வந்ததுதான் மாதவன் படமான ஜே.ஜே. அந்த படத்தில் நடித்து புகழ் பெற்று, அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தார்.

இப்பொழுதும் படங்களில் மட்டுமல்லாது தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரிசையை கிளப்பி கொண்டிருக்கும் இயக்குனரான ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் ஜேம்ஸ் என்ற ஒரு 18+ படத்தில் நடித்தார். அந்த படம் இவருக்கு பெரும் புகழை கொடுத்தது மட்டுமல்லாது இவரை இந்தியா முழுவதும் பேச வைத்தது.

அந்த படத்திற்கு பிறகு இவர் இந்தியாவின் செக்ஸ் சிம்பலாகவே பார்க்கப்பட்டார். அதன் பின்னர் மெதுவாக பட வாய்ப்புகள் குறைந்து சினிமா துறையை விட்டு மெதுவாக விலகினார். 2009 தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த கச்சேரி ஆரம்பம் படத்தில் ஒரு ஐட்டம் சாங் டான்ஸ் ஆடினார்.

பின்னர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு டெல்லியை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.கடைசியாக இந்திய கால்பந்து லீக்கின் துவக்க விழாவில் தான் இவரை கேரமரா முன் பார்க்க முடிந்தது.

மேலும் இவரது தற்போதைய புகைப்படங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here