ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழ்நாட்டிற்கு ஆதரவாக பேசி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் ஜூலி.ஆனால் இவர் எந்த அளவுக்கு பிரபலமடைந்தாரோ அதே வேகத்தில் மக்களிடம் கேட்ட பெயர் வாங்கினார்.இவர் விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு இவர் காட்டிய வக்கிரமும்,இவரது புத்தியும் மக்களுக்கு இவர்மேல் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது.மேலும் சமூக வலைதளங்களில் உள்ள நெட்டிசன்களால் மிகவும் பெரிதாக கலாய்க்கபட்டார்.

இதில் எந்த விசயத்திலும் சட்டை பண்ணாத ஜூலி தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்துவருகிறார்.தற்போதும் கூட சமூக வலைதளங்களில் பெருமளவில் கலாய்க்கபட்டார்.ஆனால் தற்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியாக ஒன்று வெளிவந்துள்ளது.

ஜூலி புதிதாக ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதுதான் அந்த செய்தி.இந்த படத்தை ஏற்கனவே ஜூலியும் 4 பேரும் மற்றும் தப்பாட்டம் ஆகிய படங்களை தயாரித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் தயாரிக்க உள்ளார்.இந்த படத்தில் ஒரு முன்னணி கதாநாயகனை அதிக சம்பளத்தில் நடிக்க வைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சித்தார்த் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.மேலும் படத்தின் தலைப்பு மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதுகுறித்து ஜூலி கூறியதாவது ‘இந்த படத்தின் கதையை கேட்டவுடன் எனக்கு பிடித்துவிட்டது.இதுபோன்ற கதையைத்தான் தேடிகொண்டிருந்தேன்.இந்த படம் கண்டிப்பாக எனது சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும்’ இவ்வாறு ஜூலி கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு புகழ் என்ற பெயரை தாண்டி பிக்பாஸ் புகழ் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் ஜுலி. இவர் அந்நிகழ்ச்சியால் எப்படிபட்ட மோசமான பிரச்சனைகளை சந்தித்தார் என்பது நம்
அனைவருக்கும் தெரியும்.

இவர் தொகுப்பாளினி என்பதை தாண்டி இப்போது நடிகையாக ஒரு புதிய படத்தில் அறிமுகமாகிறார். படம் நடிக்கிறார் என்ற தகவல் மட்டும் தான் வந்திருந்தது. இந்த நிலையில் கதைப்படி ஜுலி சமூக அக்கறை கொண்ட ஒரு பெண்ணாக ஜுலியானா என்ற பெயரிலேயே நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

மற்றபடி படத்தை பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here