2018 புத்தாண்டை முன்னிட்டு 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இரண்டு திட்டங்களை முறையே ரூ.199 மற்றும் ரூ.299 விலையில் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது. இவை வாடிக்கையாளர்களுக்கு முறையே தினமும் 1.2 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டன.இத்துடன் ரூ.149 மற்றும் ரூ.198 திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ன. இவை முறையே தினமும் 1 ஜிபி மற்றும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகின்றன. இவற்றின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். பழைய வேலிடிட்டியுடன் கிடைக்கும் திட்டங்களில் ரூ.50 தள்ளுபடி செய்யப்பட்டு பழைய விலைக்கே வழங்கப்பட்டன.

தற்போது அந்த பழைய ஆப்பர்களும் மாற்றம் செய்யப்பட்டு சிறப்பான ஆப்பராக ஜியோ தரப்பில் இருந்து வழங்கப்படுகிறது.இந்த ஆப்பர்களை குடியரசு தின சிறப்பு சலுகையாக ஜியோ தரப்பு வெளியிட்டுள்ளது.

இந்த ஆப்பர்கள் மூலம் ரூ.149 மற்றும் ரூ.198 திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ன. இவை முறையே தினமும் 1.5 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டா வழங்குகின்றன. இவற்றின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.மேலும் அனைத்து இரண்டு மாத மூன்று மாத பிளான்களும் 1.5 ஜிபி மற்றும் 2 ஜிபி ஆப்பராக மாற்றப்பட்டுள்ளது.இது பல ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சந்தோசத்தை கொடுத்தாலும் சமீபத்தில் ரீசார்ஜ் செய்த பல வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here