ஜப்பானில் கல்யாணராமன் இயக்குனர் எஸ். பி. முத்துராமன் இயக்கிய பிரபல தமிழ் திரைப்படம். இதில் கமல்ஹாசன், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட வருடம் 1985.

இத்திரைப்படம் 1979-ஆம் ஆண்டு வெளியான கல்யாணராமன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட கதை கொண்டது. இந்த படம் நடிகர் கமல் ஹாசனின் நடிப்பால் வேற பரிமானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அவருக்கும் இந்த படம் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அது மட்டுமல்லாமல் கவன்டமணி மற்றும் கோவை சரளாவின் காமெடியில் இந்த படம் கலக்கியது.

இந்த படத்தில் உலகநாயகன் கமலுடன் ஒரு குட்டி பையன் நடித்திருப்பார். அவர் பெயர் தான் டிங்கு. இவர் யார் என்று தெரியுமா? தெரிந்தால் மிகவும் ஆச்சர்யபடுவீர்கள்.இவர் வேறு யாரும் இல்லை, கோலங்கள், திருமதி செல்வம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர்தான். மேலும் இவர் நடிகர் போஸ் வெங்கட்டின் மச்சான் முரையாவர்.

இவர் சென்னையை முழுவதுமாக பூர்விகமாக கொண்டவர், இவர் 1978  ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தற்போது 39 வயதாகும் டிங்கு ஜாப்பானில் கல்யாண ராமன் படத்திற்கு முன்னர் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு விஜயகாந்தின் செம்ம ஹிட் படமான வைதேகி காத்திருந்தால் படத்திலும் நடித்திருந்தார்.

ஆனால் இவருக்கு நல்ல பெயர் எடுத்து கொடுத்தது கமலின் கல்யாணராமன் படம்தான்.இப்படி இவர் பல படங்களில் குழந்தை நடிகராக நடித்து புகழ் பெற்றார். அதன் பிறகு நன்றாக வளர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத அவருக்கு சின்னத்திரை கை கொடுத்தது.

சின்னத்திரையில் சீரியல் என்றால் இன்றுவரை மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்திருக்கும் கோலங்கள் நிகழ்ச்சியிலும் நடித்து புகழ் பெற்றார்.அதன்பிறகு திருமதி செல்வம் சீரியலில் வாசு என்ற கேரக்டரில் நடித்தார். டான்சிலும் திறமை வாய்ந்த இவர் விஜய் டீவியின் ஜோடி நம்பர் 1 சீசன் 2வில் பங்கேற்று டைட்டில் வின்னாரகாவும் ஆனார்.

அதன் பின்னர் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தார் . பின்னர் தனது குடும்பத்துடன் அமெரிக்கவில் செட்டில் ஆகி விட்டார் . அங்கு நடன பள்ளி ஒன்றை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here