வலி, வீக்கத்தை போக்க கூடியதும், உள் உறுப்புகளுக்கு பலத்தை தருவதும், சிறுநீரகம், ஈரலில் ஏற்படும் கோளாறுகளை குணமாக்க கூடியதுமான மூக்கிரட்டை கீரையின் மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம்.மூக்கிரட்டை கீரை பல்வேறு நன்மைகளை கொண்டது. இதன் இலைகள், வேர்கள் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது. சிறுநீரக வீக்கத்தை போக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது. வலியை போக்க கூடியது. சிறுநீரகம் பழுதடைந்தவர்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் மருந்தாக விளங்குகிறது.

மூக்கிரட்டை இலை, வேர் ஆகியவற்றை பயன்படுத்தி தேனீர் தயாரிக்கலாம். இலை, வேர், தண்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடிப்பதால் காய்ச்சல் குணமாகிறது.

சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் மட்டுமின்றி அனைவரும் குடிக்கலாம். இது கண்களுக்கு ஒளியை தருகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்கிறது. உடல் வலியை போக்குகிறது. வீக்கத்தை உடனடியாக கரைக்கிறது.

மூக்கிரட்டை கீரை தரையோடு தரையாக படர்ந்து சிறிய கொத்தாக ஒரு ஊதா நிற பூவை பெற்றுள்ளது. மூக்கிரட்டை கீரை சாறு கால் டம்ளர் அளவுக்கு எடுத்து, அதனுடன் 10 கிராம் துத்தி வேர், கறுஞ்சீரகம் சேர்த்து காய்ச்சி குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் யூரியா கட்டுப்பாட்டுக்குள் வரும். ரத்தம் சுத்தமாகும்.

மூக்கிரட்டையின் வேரை பயன்படுத்தி வாதம், கீழ்வாதத்துக்கான மருந்து தயாரிக்கலாம். வேருடன், சிறிது சீரகம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். இதை காமலை உள்ளவர்கள் குடிக்கலாம். வாதம், கீழ்வாதத்தால் ஏற்படும் மூட்டு வலி, வீக்கம் சரியாகும். வாரம் ஒருமுறை எடுத்துக் கொண்டால் கல்லீரல், சிறுநீரகத்தை பாதுகாக்கும் மருந்தாகிறது.

மூக்கிரட்டை புல்வெளியில் படர்ந்துள்ள கீரை வகை. சிறுநீரக பழுதை சரிசெய்யும் தன்மை கொண்ட இது,  ஈரலுக்கு பலம் தருவதாக அமைகிறது. ஆரம்பகால ஈரல் நோயை தடுத்து நிறுத்துகிறது. சிறுநீரக, ஈரல் வீக்கம் மற்றும் வலியை கரைக்க கூடியது. உள் உறுப்புகளுக்கு பலம் தரக்கூடியது. நார்ச்சத்து என்ற வகையில் மலச்சிக்கலை போக்கும். புற்றுநோய்க்கு காரணமான நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here