தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா ஆகிய அணைத்து மாநிலங்களிலும் ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டவர் சூர்யா.நடிப்பின் நாயகன் என ரசிகர்கள் அனைவராலும் அழைக்கப்படும் சூர்யா சமீபகாலமாகவே ஒரு ஹிட் படம் இல்லாமல் தவித்து வருகிறார்.இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை மிகவும் நம்பி இருக்கிறார்.இது இவருக்கு மிகப்பெரிய ஹிட் படமாக இருக்கும் என்று ரசிகர்களும் நம்புகின்றனர்.

இந்த நிலையில் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.அதற்கு பிறகு கேவி ஆனந்த் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இனைந்து நடிக்கவுள்ளார்.கேவி ஆனந்த் இயக்கத்திலேயே ஏற்கனவே அயன் மற்றும் மாற்றான் திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த திரைப்படத்தை தயாரிக்க மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமான இலங்கையை சேர்ந்த லைகா நிறுவனம் முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here