தமிழ் சினிமாவில் பல இளம் இயக்குனர்களுக்கு முன்மாதிரியாக திகழ்பவர் இயக்குனர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் வரும் படங்கள் பெரும்பாலும் காதலை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் இவரது இயக்கத்தில் வந்த காற்று வெளியிடை ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை.

இப்படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான பணியில் தற்போது பிஸியாகவே இருக்கிறார். இதில், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பஹத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்திற்கு நேற்று சென்றிருந்த சிம்பு, படத்திற்கான கதையை படித்து பார்த்துள்ளார். தொடர்ந்து நடிப்பு பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

தற்போது இந்த திரைப்படத்தின் தலைப்ப்பு மற்றும் முதல் பார்வை வெளியாகியுள்ளது.இந்த திரைப்படத்திற்கு “செக்க செவந்த வானம்” என பெயரிடப்பட்டுள்ளது. இதில் அரவிந்த்சாமி,சிலம்பரசன்,அருண்விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் தோன்றுகின்றனர்.

40 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ள இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.சிம்புவும் பல தோல்விகளை கொடுத்து மணிரத்னமும் தற்போதைய தலைமுறைக்கு ஏற்ற கதை இல்லாமல் திணறிகொண்டிருப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here