கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு சிம்பு மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.இந்த திரைப்படம் காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இந்த திரைப்படம் இன்று வரையில் காதலர்கள் மத்தியில் ஒரு முத்திரை படமாக விளங்கி வருகிறது.இந்த படத்தின் இப்படிப்பட்ட வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இந்த படத்தின் கெளதம் வாசுதேவ் மேனன் வெளிப்படுத்திய காதல் காட்சிகளே ஆகும்.பல வருடங்களாகவே இந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்காக காத்திருந்தனர்.ஆனால் தற்போது இந்த காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இதனையடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் இருப்பதாக முன்னதாக ஒரு பேட்டியில் கவுதம் மேனன் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இது குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாம் பாகத்தில் சிம்புவுக்கு பதிலாக நாயனாக மாதவன் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதனை கெளதம் வாசுதேவ் மேனன் தற்போதைய தனியார் சேனலுக்கு  அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த செய்தியால் சிம்பு ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here