தமிழ் சினிமாவில் பல்வேறு திறமைகளுடன் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர் தனுஷ், சிம்பு ஆகியோர்.சிம்பு தற்போது மணிரத்னம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவர் சமீப காலமாகவே அதிக பிரச்சனைகளை சந்தித்து வந்தார்.தனுஷ் தற்போது வடசென்னை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.தற்போது இவர்கள் இருவரும் ஒதுக்கிய ஒரு கதையில் முன்னணி நடிகர் ஒருவர் நடித்து வருகிறார்.வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி தான் அது.

விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் காளி திரைப்படம் தனுஷும் சிம்புவும் வேண்டாமென்று நிராகரித்த கதை தான்.தமிழ் சினிமாவில் வணக்கம் சென்னை என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி, இந்த படத்தை அடுத்து இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய் ஆண்டனியை வைத்து காளி என்ற படத்தை இயக்கி உள்ளார்.

முதல் படம் வெளியாகி முடிந்ததுமே இந்த கதை எழுதப்பட்டு விட்டதாம், ஆனால் தயாரிப்பாளர் நடிகர்கள் கிடைக்காததால் படம் தொடங்காமலே இருந்து வந்தது.

இந்த படத்தின் கதையை இயக்குனர் கிருத்திகா சிம்பு, தனுஷ் என இருவரிடமும் கூறியிருந்தாராம், அவர்களுக்கும் கதை பிடித்து இருந்ததாம், ஆனாலும் ஒரு சில காரணங்களால் அவர்களால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here