முன்னணி நடிகைகள் அனைவரும் ஒவ்வொரு நடிகர்களுடன் அவ்வப்போது கிசுகிசுக்களில் சிக்குவது வழக்கம்.ஆனால் இந்த தலைப்பை படித்தவுடன் உங்கள் அனைவரின் மனதிலும் என்னடா இது? சமையல்காரர்களுக்கும் இந்த புகைப்படத்தில் உள்ள நடிகைகளுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்க தோன்றும்.ஆனால் விஷயம் என்னவென்றால் இந்த நடிகைகள் அனைவரும் தங்களுக்கென ஒரு பிரத்தியேக சமையல்காரர்களை வைத்துள்ளார்கள்.அவர்கள் இல்லாமல் இவர்கள் எங்கும் செல்வதில்லை.அந்தளவிற்கு இவர்களின் சமையல் ருசி இவர்களை ஆட்டிபடைத்து கொண்டிருக்கிறது.

இந்த நடிகையாக இருப்பதை விட டார்ச்சரான விஷயம் ஒன்று இருக்காது. உடலையும் ஆரோக்கியத்தையும் மெய்ன்டெய்ன் பண்ணுவதற்கு படாதபாடு படுவார்கள். முக்கியமாக சாப்பாட்டு விஷயத்தில் கண்டதையும் சாப்பிட்டு பிரச்னை.ஆனால் கேரியர் காலி!

இதனாலேயே சமந்தா தனக்கென தனி சமையற்காரரை வைத்திருக்கிறாராம். அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் சமையற்காரரும் சென்று விடுவார்.ஷூட்டிங் வெளிநாட்டில் நடந்தாலும் சமையல்காரரை உடன் கூட்டிச் செல்கிறார்கள்.

இப்போது இந்த நடைமுறையை இன்னும் இரண்டு நடிகைகள் கடைபிடிக்கிறார்களாம். தனக்கென தனியாக ஒரு சமையல்காரரை ஷூட்டிங்கிற்கு அழைத்துப்போகும் சமந்தாவையே பின்பற்றுகிறார்களாம் காஜலும் தமன்னாவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here