1978-ஆம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜா முதல் படம் இயக்கும்போது, பாக்யராஜ் அதில் உதவியாளராக, தமது திரை வாழ்க்கையை துவங்கினார். பின் பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் உதவி இயக்குனர் மற்றும் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார்.

பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இரண்டு காட்சிகளில் நினைவில் நிற்கும்படியான, உணவு விடுதிப் பணியாளர் வேடம் ஏற்று நடித்தார். இப்படத்திற்கு வசனமும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது அடுத்த படமான புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாகவே அறிமுகம் செய்தார்.

இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜுக்கு சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ளனர்.சாந்தனு தற்போது படங்களில் நடித்து வருகிறார். அவருடைய மகள் சரண்யா 2006ல் வெளிவந்த பாரிஜாதம் என்ற படத்தில் அறிமுகம் ஆனார்.

இந்நிலையில் சரண்யாவும் அவுஸ்திரேலியாயாவை சேர்ந்த ஒரு இந்தியரும் காதலித்து வந்தனர். ஆனால் இறுதியில் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதற்காக பலமுறை ஆஸ்திரேலியா சென்று வந்த சரண்யா காதல் தோல்விக்குபின் வீட்டிலேயே முடங்கினார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சரண்யா வீட்டில் மூன்று முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சியும் செய்துள்ளாராம்.

ஆனால் உறவினர்கள் அவரை காப்பாற்றி விட்டனர். இந்த காதல் தோல்விக்கு பின்னர் உலகத்தை வெறுத்த சரண்யா தற்போது ஒரு முடிவெடுத்து தான் உண்டு தன்வேலை உண்டு என அமெரிக்காவில் படித்து வருகிறார்.

காதல் தோல்வியால் வாடும் சரண்யாவுக்கு 33 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலும் வரும் படம் வாய்ப்புகளையும் மறுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here