காதல் கொண்டேன் திரைப்படம்  2003 இல் வெளிவந்தது. இது தமிழில் தற்போது முன்னணி இயக்குனராக உள்ள செல்வராகவன் இதனை இயக்கினார். தனுஷ் இப்படத்தின் கதாநாயகன் நடித்தார் சோனியா  அகர்வால் இப்படத்தின் கதாநாயகி ஆவார். இதை இயக்கியவர் செல்வராகவன். தனுஷிற்கு இத்திரைப்படம் ஒரு திருப்பு முனையாக இருந்தது. நன்கு நடிக்க கூடியவர் என்ற பெயரைப் பெற்று தந்தது.

இந்த  படத்தில் சோனியா அகர்வால் காதலனாக நடித்தவர் சுதீப் சரங்கி.கொல்கத்தாவில் பிறந்த இவர் தனது படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டு பல ராம்ப் வால்க் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார்.

பின்னர் நடிப்பின் மீது அதிக ஆர்வம் காட்டிய அவர் கூத்து பட்டறையில் சேர்ந்து பல நாடகங்களில் நடித்து புகழ் பெற்றார். பின்னர் செல்வராகவன் இவரது நடிப்பினை பார்த்து வியந்து 2003இல் காதல் கொண்டேன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார் . அவருக்கான ரோலை அவர் கச்சிதமாக அவர் நடித்திருப்பார்.

அந்த படமும்  நல்ல வரவேற்பை பெற்றது.அதன் பின்னர் 2004 இல் வெளியான என்னமோ புடிச்சிருக்கு என்ற படத்தில் நடித்தார். அந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தரவில்லை.

பின்னர் பெங்காலி,ஹிந்தி துறையில் கவனத்தை செலுத்தினர்.2005 இல் தும் சலாம் என்னும் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமா துறையை விட்டு வெகுநாட்கள் தள்ளி இருந்தார்.

அதன் பிறகு 2015 இல் வெளியான குந்து கி கன் மற்றும் 2017 இல் வெளியான ராணுவ வரலாற்றை மையப்படுத்தி எடுக்கபட்ட ராக் தேஸ் போன்ற படங்களில் நடித்தார்.

இவர் சகாரா ஒன் ஹான்டட் நைட்ஸ் என்ற படத்தில் பெண் வேடம் அணிந்து நடித்திருப்பார். இந்த வேடம் அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது ஹிந்தி சீரியல்களில் நடித்து வருகிறார் சுதீப்.

தற்போது 2018 இல் வெளியாகவிருக்கும் ஜாக் அன் தில் மற்றும் மிலன் டாகிஸ் படங்களில் நடித்து விட்டு குடும்பத்துடன் தற்போது மும்பையில் வசித்து வருகிறார் சுதீப் சரங்கி.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here