அந்த கால சிறுசுகள் மனதில் சக்கை போடு போட்ட படம் இந்த காதலர் தினம். இதில் நடிகர் குணால் ஹீரோவாக நடித்திருந்தார் இவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சோனாலி பான்ட்ரி இந்த படத்தில் நடிக்கும் முன்பே பாலிவுட்டில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சோனாலி.

இவர் 1975ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் சோனாலி. இவர் பல வட இந்திய படங்களில் நடித்திருந்தாலும் காதலர் தினம் என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார் . 1994முதல் ஷாருக்கான், சல்மான்கான், ஆமீர்கான், சயீப் அலிகான் என அனைத்து முன்னணி ஹீரோக்களிடனும் நடித்தவர் சோனாலி.

இவர் முதன் முதலில் பாம்பே படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் . பின்பு தான் 1999ஆம் ஆண்டு காதலர் தினம் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

மேலும் அதே வருடம்  அதே  ஆண்டு அர்ஜுன் நடித்த கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின்னர் தமிழில் அவர் நடிக்கவில்லை. கடந்த 2002ஆம் ஆண்டு கோல்டி பெல் எனும் இயக்குனரை திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் இவர்களுக்கு கடந்த 2005ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. திருமணதிற்கு பின்பு கணவன் வீட்டில் நடிக்க அனுமதி இல்லாததால் இவர் நடிக்கவில்லை  கடந்த 2012ஆம் ஆண்டு கடைசியாக One Upon A Time In Mumbai Dobra என்னும் ஹிந்தி படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்தார்.

பல மொழி படங்களில் நடித்த இவர் இன்றுவரை தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது . மேலும் காதலர் தின படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதில் ஆழமாக நினைவில் இருக்கிறார்..

தற்போதைய புகைப்படங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here