பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி இன்றுவரை புதிய புதிய நிகழ்ச்சி தொடர்களை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது . இதில் புது புது முகங்களும் திறமையாளர்களும் தங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் ,

இப்படி விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல முகங்களை நாம் பார்த்து இருப்போம் ஆனால் அவற்றில் ஒரு சிலர் மட்டுமே நம் மனதில் இடம் பிடிப்பது மட்டுமல்லாது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை பயணிக்கின்றனர்.

இப்படி விஜய் டீவியில் ஒளிபரப்பான பேமஸ் சீரியல் ‘கனா காணும் காலங்கள்’ மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றவர் நடிகர் யுதன் பாலாஜி. இந்த சீரியலில் ஜோ என்ற கேரக்டரில் நடித்திருப்பார் பாலாஜி. இவரது உண்மையான பெயர் பாலாஜி பாலகிருஷ்ணன்.

அதன் பின்னர் பட்டாளம், காதல் சொல்ல வந்தேன், நகர்வலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார் பாலாஜி. மேலும் தெலுங்கில் ஒரு படம் நடித்து அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

மேலும் இவர் சந்தானம்  மற்றும் சிவகர்த்திகேயனுக்கு முன்பே விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்கு பயணித்தவர். ஆனால் தனக்கு தக்க வாய்ப்புகள் கிடைக்காததால் இந்த நிலைமைக்கு வந்துவிட்டதாக நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜி தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் யுதன். மேலும், அதே ஆண்டு ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார் யுதன் பாலாஜி.

இந்நிலையில் நேற்றைய காதலர்  ஸ்பெஷலாக தன் மனைவி ப்ரீத்தியுடன் இருமனதாக விவாகரத்து பெறுவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார் பாலாஜி.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here