தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கிய ஏர்செல் வாடிக்கையாளர்களின் புலம்பல் சத்தம் இன்னும் தீரவில்லை. ஆம். ஏர்செல் இணைப்பில் இருந்து மற்றவர்களுக்கும் தொடர்பு கொள்ள முடியவில்லை. மற்ற தொலைத்தொடர்ப்பு இணைப்புகளிலிருந்தும் ஏர்செல்லுக்கு கால் செல்வதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஏர்செல் இந்தியாவின் 6வது மிகப்பெரிய செல்போன் சேவை நிறுவனம். தமிழகத்தில் சிவசங்கரன் என்பவரால் 1999-ல் தொடங்கப்பட்ட ஏர்செல், தமிழகத்தின் கடைக்கோடி வரை மொபைல் சேவையை கொண்டு சேர்க்க உதவியது. கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர் சூர்யா ஆகியோர் கூட ஏர்செல் நிறுவன விளம்பரங்களில் நடித்து அதனை பிரபலபடுத்தினார்.

இதனால் தமிழகத்தில் ஏர்செல்லுக்கு லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் உண்டு. முன்னர் ஒரு காலத்தில் மற்ற நிறுவனங்களை காட்டிலும் ஏர்செல்லில் அதிக சலுகைகள் வழங்கப்பட்ட காரணத்தினால் அதற்காகவே ஏர்செல் சிம்கார்டுகளை பயன்படுத்தத் தொடங்கியவர்களும் உண்டு.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிம்கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதனை மாற்ற அவ்வளவு எளிதாக மனம் வராது. எத்தனையோ சலுகைகளை வழங்கி புது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வந்தாலும் கூட ஏர்செல்லை மாற்றாமல் பயன்படுத்தும் பலரும் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது ஏர்செல் உபயோகம் செய்யும் பயனாளிகளின் உண்மை கதி என்ன அவர்களின் நம்பரை தக்கவ்பைது கொள்ள என்ன செய்வது என்பதை ஏர்செல் எந்தவித அறிவிப்பும் வெளியிட்டு கூறவில்லை.ஆனால் சமீபத்தில் கூறப்பட்டுள்ள தகவலின்படி ஏர்செல் நிறுவனம் தன்னுடைய நெட்வொர்க் ரீதியாக சில தடன்ம்கல்களை சந்தித்து வருவதாகவும் அதனை விரைவில் பூர்த்தி செய்வதாகவும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி உங்கள் நம்பரை மற்ற ஒரு தீர்வு கிடைத்துள்ளது.முதலில் உங்கள் மொபைலில் ஏர்செல் சிக்னல் கிடைக்கிறதா என்று பாருங்கள்.அப்படி இல்லாத பட்சத்தில் உங்கள் நெட்வொர்க் செட்டிங்க்ஸ்க்கு சென்று அதில் மொபைல் நெட்வொர்க்ஸ் ஆப்சனை கிளிக் செய்யவும்.

தற்போது உங்களுக்கு MANUAL மற்றும் CHOOSE AUTOMATICALLY என இரண்டு ஆப்சன் தோன்றும். அதில் MANUAL கிளிக் செய்யவும்.பிறகு உங்களுக்கு உங்கள் பகுதியில் இருக்கும் நெட்வொர்க்க்குகள் தோன்றும்.அதில் ஏர்டெல் 2G எனும் ஆப்சனை கிளிக் செய்யவும்.

தற்போது உங்களுக்கு நெட்வொர்க் முழுவதுமாக கிடைக்கும்.இதை பயன்படுத்தி உங்கள் மொபைல் என்னிலிருந்து PORT என டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பி உங்களது PORT கோடை பெற்றுகொள்ளலாம்.கிடைக்கும் போர்ட் கோடை பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான நெட்வொர்க்கிற்கு மாறிக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here