பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Palawan தீவில் பெயர் வெளியிடப்படாத மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது புயலின் சீற்றம் ஆரம்பித்ததால் பாதுகாப்பிற்கு நங்கூரத்தினை வீசியுள்ளார்.

ஆனால் நங்கூரமானது பாறையொன்றில் சிக்கியதால் நீண்ட நேரம் போராடி அதனை வெளியே எடுத்த போது அதில் மிகப்பெரிய முத்து ஒன்று சிக்கியிருப்பதை அவதானித்துள்ளார்.

அவர் கையில் கிடைத்த அந்த முத்துவின் மதிப்பினை அறிந்திராத அவர் அதனை அதிர்ஷ்ட கல்லாக வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார். மாதக்கணக்காக இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளாக அந்த முத்தின் மதிப்பு தெரியாமல் வீட்டிலேயே வைத்துள்ளார்.

அப்போது அவர் வசித்து வந்த மரத்தினால் செய்யப்பட்ட வீடு தீ விபத்திற்கு உள்ளானதும் அந்த முத்தினை எடுத்துக்கொண்டு மற்றொரு வீட்டிற்கு குடிபெயர முயன்றுள்ளார். அச்சமயம் அப்பகுதியில் வசித்து வந்த சுற்றுலாதுறை அதிகாரி ஒருவர் எதிர்பாராத விதமாக இந்த முத்தினைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து விலையில்லா கற்களைப் பற்றி ஆய்வு செய்துவரும் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 34 கிலோ எடையுள்ள அந்த முத்தினை ஆய்வுசெய்த போது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய முத்து இதுதான் என்பது தெரியவந்துள்ளது.

இதன் தற்போதைய மதிப்பு 76 மில்லியன் பவுண்ட். அதாவது ரூ.672 கோடியாக தெரியவந்துள்ளது. 1934ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 6.4 கிலோ முத்து தான் உலகின் பெரிய முத்து என பெயர் பெற்றுள்ளது.

ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட முத்து அப்பெயரினை முறியடித்து நியூயார்க் நகரில் உள்ள கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here