‘சீயான் விக்ரம்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர், நடிகர் விக்ரம் அவர்கள். நடிப்பில் எந்தவொரு முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் 1990 ஆம் ஆண்டில் கால்பதித்த அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’, ‘6 முறை ஃபிலிம்ஃபேர் விருது’, ‘தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருது’, ‘3 முறை விஜய் விருது’, சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, ‘அம்ரிதா பட விருது’, ‘சர்வதேச தமிழ்ப் பட விருது’, ‘விகடன் விருது’ எனப் பல்வேறு விருதுகளை வென்று, ‘பீப்புள்’ஸ் யுனிவெர்சிட்டி ஆஃப் மிலன்’ல் இருந்து ‘கௌரவ டாக்டர் பட்டத்தையும்’ வென்றார். ஒரு நடிகராகத் திரையுலகில் நுழைந்த அவர், பின்னணிப் பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.

மக்களின் நலனுக்காகப் பல சமூக நலத் தொண்டுகளைத் தனது ரசிகர் மன்றம் மூலமாக செய்து வரும் அவர், ‘சஞ்சீவனி டிரஸ்ட்’ மற்றும் ‘வித்யா சுதா’ ஆகிய பொதுநல நிறுவனங்களின் விளம்பரத் தூதராகவும் இருந்து வருகிறார்.

இத்தகைய சிறப்புமிக்க நடிகர் ‘சீயான்’ விக்ரம் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர் ஆற்றிய பங்களிப்பையும், சாதனைகளையும் சொல்லிக்கொண்டே போகலாம்

வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காகவே சினிமாவில் நடித்து வாழ்ந்து வருபவர்கள் பல நடிகர்கள். அதில் முக்கியமாக அனைவராலும் சொல்லக் கூடியவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம், சாமி என படங்கள் வெளியாக இருக்கிறது.

இவருடைய மகனும் வர்மா என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.இந்த நிலையில் விக்ரம் மனைவி சைலஜா குறித்து சின்ன தகவல் சமூக வலைதளத்தில் உலா வருகிறது.

விக்ரமின் மனைவி சைலஜா அடிப்படையில் ஒரு சைக்காலஜி நிபுணர். போதை பொருட்களுக்கு அடிமையாகும் பலருக்கு கவுன்சிலிங் மூலம் மறுவாழ்வு கொடுத்துள்ளார்.

தற்போது சைலஜா சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் சைக்காலஜி ஆசிரியராக வேலை செய்து வருகிறாராம்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here