ஐபிஎல் ஏழாம் நேற்று தொடங்கி இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த ஏலத்தில் பல வீரர்கல் எதிர்பார்ப்பிற்கு மேலான விலையில் ஏலம் போனார்கள்.ஜெயதேவ் உனட்கட் இன்றைய ஏலத்தில் 11.5 கோடிக்கு ஏழாம் போனார்.இது யாருமே எதிர்பாராத ஒரு தொகை என்றாலும் இவரின் ரஞ்சி கோப்பையில் நன்றாக விளையாடியதாலும் கடந்த சீசனில் நன்றாக விளையாடியதாலும் நல்ல விலைக்கு எடுக்கப்பட்டார்.

அதே சமயம் பல நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் விலைபோகாமல் போனார்கள்.இது பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.இன்றைய ஏலத்தில் கூட பல முக்கிய நட்சத்திர வீரர்கள் விலைபோகாமல் ஆகினர்.

முக்கியமாக மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிரிஸ் கெய்ல் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கடந்த சீசனில் இரண்டு சதங்கள் அடித்த ஆம்லா ஆகியோர் விலைபோகாமல் போனது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் அவர்களின் சமீபத்திய பார்ம் காரணமாகவே அவர்கள் ஏலத்தில் விலைபோகாமல் இருந்திருக்கலாம் எனத்தெரிகிறது.ஆனால் இதுபோகவும் எல்லா அணிகளுக்கும் இவர்களை ஏலத்தில் எடுக்க ஒரு வாய்ப்பு உள்ளது.

இன்று மாலை மீண்டும் அணிகள் விருப்பப்பட்டால் அவர்களை எடுக்க ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.அதில் தேவையான வீரர்களை அந்தந்த அணிகள் எடுத்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here