மும்தாஜ் இந்திய திரைபடத்தின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழில் மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழ் மட்டுமில்லாது, மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் அதிகம் பேசப்பட்ட நாயகிகளில் இவரும் ஒருவராவார்.

இன்னும் கட்டிபிடி கட்டிபிடி பாடலைகேட்டல் இளசுகள் மனதில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் நடனத்தை ஏற்படுத்தியவர் மும்தாஜ்.

மும்தாஜ் என்றால் நமக்கு உடனே நியாபகம் வருவது கவர்ச்சி தான். தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவிற்கு பிறகு ஒரு கவர்ச்சி நடிகை பல ஆண்டு நிலைத்தார் என்றால் அது மும்தாஜ் தான். இவர் 1980ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர்.

இவருடைய உண்மையான பெயர் ‘நக்மா கான்’. படத்திற்காக தனது பெயரை மும்தாஜ் என்று மாற்றிக்கொண்டார். சிறு வயதில் இருந்தே மிகத்திறமையாக வளர்ந்தவர் மும்தாஜ். இவர் தமிழ், தெலுங்கு, உருது, பாஞ்சாபி, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகள் கற்றறிந்தவர்.

மாடலிங் துறையில் கவனம் செலுத்திவந்தார் ஆரம்ப காலம் முதலே பின்னர் t. ராஜேந்தர் இவரை பார்த்து பிடித்து போனதால் தன்னுடைய படத்திலே நடித்தார் . இந்த படத்தை வைத்து தான் அவருக்கு மோனிஷா என ஒரு பெயரை வைத்தார் டி.ஆர். ஆனால் அந்த பெயர் பிடிக்காமல் மும்தாஜ் மாற்றிக்கொண்டார் நக்மா கான்.

அதன் பின்னர் நடிகர் விஜய்யுடன் நடித்து கட்டிபிடி பாடலின் மூலம் பெரும் புகழ் அடைந்தார் . இந்த மந்திரத்தை பிடித்த மும்தாஜ் அதன் பின்னர் தனக்கு வரவேற்பு உள்ள ஐட்டம் டான்சில் மட்டும் ஆடி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

அதன் பின்னர் பல தமிழ் படங்களில் நடித்து வந்தார், ஏழுமலை, பட்ஜெட் பத்மநாபன், சாக்லேட், மகா நடிகன், மிட்ட மிராசு, மலபார் போலீஸ் உள்ளிட்ட படங்களில் அது போன்ற ரோல்களில் நடித்தார். இதுவும் இவருக்கு வரவேற்பபை கொடுத்தது. பின்னர் தன்னை அறிமுகம் செய்த இயக்குனர் டி ஆருடன் 2007ல் வீராசாமி படத்தில் நடித்தார்.

அதன் பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்காததால் அவரது சினிமா வாழ்க்கை கேள்விக்குறியானது . அவரது உடல் எடையும் அதிகரித்தால் எந்த திரைப்பட துறையும் அவரை அனுக வில்லை . இதனால் சில வருடங்கள் கடினமாக உழைத்து மீண்டும் தனது கட்டான உடல் அமைப்புடன் வந்தார்.

2009ல் கடைசியாக ராஜாதி ராஜா படத்தில் லாரான்சுக்கு வில்லியாக நடித்தார். இந்த படம் அவருக்கு பெரிய வரவேற்பு தரும் என நம்பினார். ஆனால், அந்த படமும் கைவிட தற்போது எந்த ஒரு படங்களிலும் முக்கிய ரோலில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

இவரின் தற்போதைய புகைப்படங்கள் கிழே:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here