திரை உலகில் தன்னுடைய சொந்த பிரச்னை காரணமாகத்தான் மிக அதிக அளவில் பிரபலம் ஆனவர் தான் தாடி பாலாஜி.வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த பாலாஜி தனியார் தொலைக்காட்சி நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.

நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் பலரும்,குறிப்பாக காமெடியாக பேசி மக்கள் மத்தியில் பிரபலமான நிஷா உள்ளிட்டோரும் தாடி பாலாஜியை நிகழ்ச்சியிலியே கொஞ்சலாக பேசும் பல காட்சிகளை மக்கள் பார்த்தனர் உண்மையில் இவ்வளவு காமெடி மன்னனா தாடி பாலாஜி என நினைத்தவர்களுக்கு எல்லாம் இடி வந்து விழுவது போல அவருடைய வீட்டு பிரச்னை தலை தூக்கியது.

சமீபத்தில் தாடி பாலாஜி தன்னை அசிங்கமாக பேசி வருவதாகவும் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து அடிப்பதாகவும் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்த அவரது மனைவி நித்யா தற்போது பிரிந்து வாழ்கிறார். அதுமட்டும் இல்லாமல், பெற்ற பிள்ளையையே தீயிட்டு எரிக்கும் அளவிற்கு சென்ற தாடி பாலாஜி குறித்த நடவடிக்கை பல முறை தொலைகாட்சிகளில் ஒளிபரப்பபட்டது.

சரி இந்த பிரச்சனைகள் முடிவடைந்தது என்ற நிலையில் மீண்டும் போலீசார் ஒருவரிடம் தவறுதலாக பேசுவது போல ஆடியோ வெளிவந்து சர்ச்சையை கிளப்பியது.

ஆனால் இப்ப பாத்தா என்ன பிரச்சன னு ஒரு பேட்டி கொடுத்தார் பாலாஜி. அதுல அவர் என்ன சொல்றாருனா என் பொண்டாட்டிக்கு பாசில் அப்படின்ற ஜிம் டிரைனரோட கள்ளத் தொடர்பு இருக்குது. அதனால தான் என் மேல அவங்க பொய் வழக்கு போட்டு பிரஞ்சிட்டாங்க அப்படினு சொல்றாப்ல.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here