சமூக வலைதளங்களில் அடிக்கடி பேசப்படுபவர்கள் தல அஜித்குமாரும் தளபதி விஜயும் ஆவார்.இதில் விஜய் படங்கள் அஜித் திரைப்படங்களை விட அதிக அளவில் கலாய்க்கப்படும்.இந்த விமர்சனங்கள் தல அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் பொது.தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாபெரும் ரசிகர்கள் கூட்டத்துடன் சாதனை நாயகனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விசியம் தான்.

இது போக வலைதளங்களில் உள்ள விமர்சனர்கள் பலர் இதுபோல அஜித் விஜய் படங்களுக்கு விமர்சனம் கொடுப்பது வழக்கம்.அது போல தற்போது கசாயம் வித் பாஸ்கி என்ற விமர்சன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாஸ்கி நடிகர் விஜயை சந்தித்துள்ளார்.

பிரபல நடிகரும் திரைப்பட விமர்சகருமான பாஸ்கி சமீபத்தில் விஜயை சந்தித்துள்ளார், அப்போது அவரிடம் பட விமர்சனங்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு நீங்க எல்லாமே பரவாயில்லை. என்னுடைய பிரண்ட்ஸ் குரூப் ஒன்னு இருக்கு அவங்க எல்லாரும் என் படத்தை பீஸ் பீஸாக கிழித்து தொங்க விடுவாங்க என சிரித்து கொண்டே கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here