ஏர்செல் நிறுவனம் முடங்கியதுதான் நேற்றிலிருந்து இன்று வரை பெரிய செய்தியாக உள்ளது.எந்த வித முன்னறிவிப்புமின்றி தனது நெட்வொர்க் சேவையை நிறுத்தியதால் பல தொழில் முனைவோர் முதல்கொண்டு சிறிய பாமர மக்கள் வரை அனைவருக்கும் பிரச்சனையாகிபோனது.

தற்போது வரையில் பல இடங்களில் ஏர்செல் சேவை இல்லாததால் பொதுமக்கள் ஆங்காங்கே உள்ள ஏர்செல் அலுவலகங்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.கோவையிலுள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்நிறுவனத்தின், தென் மாநில தலைவர் சங்கரநாராயணன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: நாங்கள், குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்தின், தொலைத்தொடர்பு கோபுரங்களை பயன்படுத்துகிறோம். இரு தரப்புக்கு இடையே நிதி தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் திடீரென செல்போன் டவர்களை முடிவிட்டனர். இதனால்தான், சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பீதி காரணமாக வேறு நிறுவனத்திற்கு மாறும் வசதியை, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் பெற முயற்சித்து வருகிறார்கள். எனவேதான், சர்வர் தாக்குப்பிடிக்க முடியாமல் செயலிழந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பார்க்கையில் குறைந்தது இன்னும் ஓரிரு தினங்களில் ஏர்செல் நெட்வொர்க் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்செல் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டால் அதன் விளைவாக பல கோடி வாடிக்கையாளர்கள் பாதிக்கபடுவார்கள் ஆனால் அப்படி நிறுவனத்தின் சேவையை நிறுத்திக்கொள்கிறோம் என ஏர்செல் நிறுவனம் TRAI போன்ற அரசு ஆணையத்திடம் முன் அனுமதி பெற்று முறைப்படி அறிவிப்பு வெளியிடட்டும்..!

முறைப்படி அறிவிப்பு வெளியிட்டாலும் கூட தற்போது பரவி வரும் வதந்திகளை போல் இரண்டு நாட்கள், ஒரு வாரம் என நாட்களை கையில் அடக்கிட முடியாது என்பதும் குறைந்தபட்சம் 90நாட்கள் சேவையாற்ற வேண்டும் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here