ஸ்வேதா கோனுர் என்ற இயற்பெயரைக் கொண்ட மாளவிகா பெயார் எண்ட் லவலீ மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைப்பட நடிகையானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்குதிரைப்படங்களில் நடித்துள்ளார்.சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான திரைப்படமான உன்னைத் தேடி திரைப்படத்தில் அஜித்குமாருடன் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் திரைப்படத்துறையில்அறிமுகமானார்.

2002-2003 இல் இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் வெற்றியளிக்காததால் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கச் சென்றார். 2004 ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன்திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மறுபடியும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

அதன்பின்னர், ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, கந்தா கடம்பா கத்திரவேலா, பேரழகன், வசூலராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, வியாபாரி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என பல தமிழ் படங்களில் நடித்தார் மாளவிகா. பின்னர் பாலிவுட்டில் சீ யூ எட் 9 திரைப்படத்திலும் நடித்தார்.

பட வாய்ப்புகள் குறைந்து போகவே கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பின்பும் சில படங்களில் நடித்தார் மாளவிகா.

கடைசியாக 2009ல் ஆயுதம் செய்வோம் என்ற படத்திலும் 2009ஆம் ஆண்டு ஆறுபடை என்ற படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்தார் மாளவிகா.

பின்னர் பட வாய்ப்புகள் அறவே இல்லாததால் குடும்ப பெண்ணாக தனது குழந்தைகளை பார்த்து வருகிறாராம்.

மாளவிகாவின் தற்போதைய புகைப்படங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here