மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கமல் தனது அரசியல் கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் திருமண மண்டபத்தில் மீனவர்களுடன் சந்திப்பு கூட்டம் நடத்தினார்.

மேடையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில், கமல்ஹாசன் தனது கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார். இதையடுத்து கூட்டத்தில் பெரும் ஆரவாரம் எழுந்தது.

அவர் அவ்வப்போது ட்விட்டரில் போடும் டிவீட்டுகள் போலவே இவரது கட்சியின் பெயரும் பலருக்கு புரியாத வண்ணம் இருந்தது.மேலும் மையம் என்ற வார்த்தையை அவர் மய்யம் எனபயன்படுதி கட்சியின் பெயரை அமைத்திருப்பது சற்று வித்தியாசமாக இருந்தது.

கன்னடத்தில் மையம் என்ற வார்த்தைக்கு விபச்சார விடுதி என பொருள்படும் என்பதால் கட்சியின் பெயரை மய்யம் என மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் இதிலும் பிரச்சனை உள்ளது.மய்யம் என்ற வார்த்தை சுடுகாடு என பொருள் தருவதாக பலரும் கூறுகின்றனர்.

மேலும் தெற்கு பகுதிகளில் மய்யம் என்ற வார்த்தைக்கு பிணம் என்றும் பொருள் உள்ளதாக தெரிகிறது. மற்றவர்களை குழப்பும்படி பேசும் கமலின் கட்சி பெயரே இவ்வாறு அமைந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here