எப்படி ஒருவரின் ஆரோக்கியத்திற்கு, அவர்களின் தனிப்பட்ட மற்றும் பல்வேறுபட்ட மரபணுக்கள் தான் காரணமோ, அதேப்போல் இரத்த வகைகளும் ஒருவரின் ஆரோக்கியத்திற்கும் காரணமாக இருக்கும். அந்த வகையில் ஒவ்வொருவரும் தங்களின் இரத்த வகைகளுக்கு ஏற்ற உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது அவசியம்.அதுமட்டுமின்றி ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டியதும் அவசியம்.

அவ்வாறு இல்லாமல் இரத்த வகைக்கு பொருந்தாத கண்ட உணவுகளை உட்கொண்டு வந்தால், அதனாலேயே வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம், செரிமான பிரச்சனை மற்றும் ஏன் புற்றுநோய் கூட ஏற்படும் வாய்ப்பு உள்ளது.எனவே ஒவ்வொருவரும் தங்களின் இரத்த வகையை தெரிந்திருப்பதோடு, எந்த வகையான உணவை உட்கொள்ள வேண்டும், எதை உட்கொள்ளக்கூடாது என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

O இரத்த பிரிவு:

சாப்பிட வேண்டியவை:
இந்த வகை இரத்த பிரிவினர் புரோட்டீன் நிறைந்த உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதற்கு ஆட்டிறைச்சி, சிக்கன், கடல் உணவுகள் மற்றும் காய்கறிகளில் பசலைக்கீரை, கேல் மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

A இரத்த பிரிவு:

சாப்பிட வேண்டியவை:
இந்த வகையினர் சைவ உணவுகளை சாப்பிடுவது தான் நல்லது. ஏனெனில் இவர்களின் செரிமான மண்டலமானது மிகவும் சென்சிடிவ்வானது. இவர்கள் லேசான உடற்பயிற்சி மற்றும் அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டாலேயே, விரைவில் மன அழுத்தத்தைக் குறைப்பார்கள். இவர்கள் ஆப்பிள், பெர்ரிப் பழங்கள், அத்திப்பழம், அவகேடோ, பிரட் மற்றும் பாஸ்தா போன்றவற்றை உட்கொள்ளலாம். மேலும் புரோட்டீன்களை இறைச்சியில் பெறுவதற்கு பதிலாவ, நட்ஸ் மற்றும் சோயா பொருட்களின் மூலம் பெறலாம்.

B இரத்த பிரிவு:

சாப்பிட வேண்டியவை:
இந்த வகை இரத்த பிரிவினர் சகிப்புத்தன்மையுடனான செரிமான அமைப்பைக் கொண்டவர்கள். இவர்கள் இறைச்சி, பால் பொருட்களை நன்கு சாப்பிடலாம். அதிலும் மாட்டிறைச்சி, மீன், பச்சை காய்கறிகள் மற்றும் தானியங்கள் என்று எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

AB இரத்த பிரிவு:

சாப்பிட வேண்டியவை:
இந்த வகை இரத்த பிரிவு ஆயிரம் வருடங்கள் பழமையானவை. இந்த இரத்த பிரிவினரின் செரிமான பாதை மிகவும் சென்சிடிவ்வாக இருக்கும். இவர்கள் பீன்ஸ், வான்கோழி, பருப்பு வகைகள், கடல் உணவுகள், டோஃபு மற்றும் பால் பொருட்களை உட்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, பழங்களான ஆப்பிள், தர்பூசணி, அத்திப்பழம் மற்றும் வாழைப்பழங்களை அதிகம் உட்கொள்வது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here