உலகமே வியந்து பொறாமைப் பட்ட ஒரே மனிதன் ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ், இவர் உடல்நலம் குன்றி 56 வயதில் இந்த உலகை விட்டு பிரிவதற்கு முன்பாக உலகிற்கு சொன்ன செய்தி: வணிக மயமான உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு எடுத்துகாட்டாய் விளங்கியது.. நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் , பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாக காட்சியளிக்கிறது.. உங்கள் நிர்வாகத்தைநிர்வகிக்க யாரையாவது நியமிக்கலாம்.

உங்களுக்காக சம்பாதிக்க எத்தனை பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.

எந்தப் பொருள் தொலைந்தாலும் ஈஸியாக தேடிவிட முடியும், அல்லது புதிதாக வாங்கிவிட முடியும்.. ஆனால் வாழ்க்கை தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்கவே கிடைக்காது.

வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும், நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம் என்பதை நினைக்க மறவாதீர்கள்.

செலவழிக்க சான்ஸ் இல்லாதபோது உங்கள் பர்சில் 100 ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும், 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான்.

ஆனால் மாறுபட்டது ஒன்று உள்ளது, உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி, மரண படுக்கையில் யோசிக்காதீர்கள், பணம் நம் வாழக்கையை பொருளற்றதாக மாற்றிவிட்டதே என்று…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here