உடல் எடை கூடுவது தற்போதுள்ள தலைமுறையிடம் இருக்கும் பெரிய பிரச்சனை ஆகும்.அதிகப்படியான இளைஞர் சமுதாயம் உடல் எடை கூடுவதால் அவஸ்தைப்படுகிறது.இதனை சரிசெய்ய ஒரு எளிய வழிமுறை கிடைத்துள்ளது. உடல் எடையை குறைக்க உதவும் அரிசி பால் கஞ்சி சத்தும் சுவையும் நிறைந்த அரிசி பால் கஞ்சியைத் தயாரிப்பது மிகவும் சுலபம். இந்தக் கஞ்சியை ஒருவர் தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வந்தால், உடல் கொழுப்புக்கள் முற்றிலும் கரைத்து,உடல் மெலிந்துவிடும்.

தேவையான பொருட்கள் :

கைக்குத்தல் அரிசி – 1/2 கப் – தண்ணீர் – 4 கப் – சூரியகாந்தி எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் – தேன் – 2 ஸ்பூன்

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் அரிசியைப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.சாதம் நன்கு வெந்ததும், அதை இறக்கி குளிர வைக்கவும்.
அதன் பின் சாதத்தை தண்ணீர் விட்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். அதில் சூரிய காந்தி எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது தேன் சேர்த்து கொண்டால், அரிசி பால் கஞ்சி தயார்! இனிப்புப் பிடிக்கவில்லை என்றால் சிறிதளவு பட்டைத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்தக் கஞ்சியை தினமும் இரண்டு தம்ளர் குடிக்கலாம். உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் இக்கஞ்சி அருந்துவதுடன் தொடர்ந்து உடற்பயிற்சியும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.இதில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் உடலுக்கு பலம் தரும். பக்கவாதம், இதயம் சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் இந்தக் கஞ்சி நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here