ஒரு மாதத்திற்கு முன்பாக, எனது அலைபேசியில், ஒரு புதிய எண் வந்தது. நான் வானத்தை ஓட்டிக் கொண்டிருந்ததால், உடனே அலைபேசியை எடுத்துப் பேச இயலவில்லை. வீட்டிற்கு வந்ததும், பல வேளைகளில், எனக்கு ஃபோன் வந்ததையே மறந்து விட்டேன். பிறகு, மீண்டும் அதே எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த எண்ணில் பேசியவர், தனது பெயர் முக்தீசுவரன் என்றும், தன்னிடம் ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம் இருப்பதாகவும், அதை தனது தாத்தா தன்னிடம் தந்து விட்டுச் சென்றதாகவும் சொன்னவர், அது என்ன படம்?, என்ற நான் கேட்டவுடன், அதை நேரில் காட்டுகிறேன். உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும், என்றார். நான் நேரம் கிடைக்கும் போது வருகிறேன், என்று சொல்லி விட்டு, அந்த நம்பரையும், அவரது பெயரையும் டைரியில் குறித்து வைத்து விட்டேன். பிறகு தொடர்ச்சியாக வந்த வேலைப் பளுவில் அதை மறந்து விட்டேன்.

பின் ஒரு ஓய்வு நேரத்தில், டைரியை எடுத்துப் பார்த்து, அந்த முக்தீசுவரனைத் தொடர்பு கொண்டு பேசி விட்டு, அன்று மாலையே அவரைப் பார்க்கப் போனேன். வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு, தெற்கே தான் அவர் நின்றிருந்தார். பிறகு அவருடன் அவர் வீட்டிற்குச் சென்றேன். இண்டு, இடுக்கு வழியாக, ஒண்டுக் குடித்தனங்கள் வாழும் பகுதியில் தான் செல்ல முடிந்தது. மிகச் சாதாரணமான வீடு அவருடையது. ஒரு ஹால், மற்றும் ஒரு சமையல் கூடம். அவ்வளவு தான். ஒரு உடைந்த நாற்காலியில் என்னை அமர வைத்தார். பிறகு, உள்ளங்கை அளவு கொண்ட ஒரு கருப்பு வெள்ளைப் புகைப்படத்தைக் காட்டினார். அதில், ஒரு அதிசயத் தோற்றம் கொண்ட மீன் ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. அந்தப் படத்தைவுடன் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு சுறா மீனின் அளவில் இருந்தது அந்த மீன். தலை, வாய் மற்றும் உடல் பாகம் எல்லாமே மீனின் தோற்றத்தில் தான் இருந்தன. அந்த மீனின் வால் பகுதியைப் பார்த்த போது தான் என்னால் நம்பவே முடியவில்லை.

வால் இருக்க வேண்டிய இடத்தில், அழகான ஒரு பெண்ணின் இரு கால்கள் ஒன்றோடு ஒன்று இணைந்திருந்தது போல் காணப்பட்டது. எனக்கு ஓரளவு ஃபோட்டாஜினிக் தெரியும். அந்தப் படம் உண்மை தானா, அல்லது ஏதாவது மார்பிங், ஃபோட்டோ என்று ஏதாவது மாயம் செய்திருக்கிறார்களா? என்று சற்று சந்தேகத்துடன் அந்தப் படத்தை ஆராய்ந்தேன். படம் உண்மை தான். அந்தக் கால பழைய கருப்பு வெள்ளைப் படம் எப்படி இருக்குமோ, அப்படியே இருந்தது. இந்த ஃபோட்டாவிற்குப் பின்னால் ஆங்கிலத்தில் பேனாவினால் எழுதப்பட்ட பெயர் ஒன்று இருந்தது. அத்துடன் 1941 என்று வருசமும் போட்டிருந்தது. அது தான் அவரது தாத்தாவாம். அவர் தான் தன் பெயரைக் கையெழுத்திட்டு, தன் பேரனுக்கு, பரிசாகத் தந்திருக்கிறார்.

நான் மீண்டும் அந்தப் படத்தைப் பார்ததேன். கடல் கன்னி என்று பல கதைகளில் படித்திருக்கிறோமே, அது இப்படித்தான் இருந்திருக்குமோ என்ற ஐயம் கூட என் மனதில் எழுந்தது. இந்த மாதிரியான புகைப்படத்தை இதற்கு முன்பாக நான் பார்த்ததேயில்லை. இந்தப் படம் எப்படி எடுக்கப்பட்டது? என்று முக்தீசுவரனிடம் கேட்டேன். முக்தீசுவரனின் தாத்தா, ஆங்கிலேயர் காலத்தில், தூத்துக்குடி துறைமுகக் காவலராகப் பணியாற்றி இருக்கிறார். தூரத்தில் இருந்து வரும், படகுகளைக் கண்காணிக்க அவருக்கு, ஒரு பைனாகுலரும், முக்கியமானவற்றைப் படம் எடுக்க, பழைய மாடலான, ஃபிலிம் ரோல் மாட்டக் கூடிய, கேமரா, மற்றும் ஒரு பெரிய பித்தளை விசிலையும் கொடுத்திருக்கின்றனர். ஒரு நாள் இவர் கடலோரம், ரோந்து பணியைச் செய்து கொண்டிருக்கும் போது தான், இறந்த நிலையில் கரை ஒதுங்கிய இந்த அதிசய மீனைக் கண்டிருக்கிறார்.

உடனே, ஆவல் மீறிட, அந்த மீனைப் படம் எடுத்து, பின் அந்த செய்தியை உயர் அதிகாரியான ஆங்கிலேயரிடம் சொல்லியிருக்கிறார். அவரும் அதைப் பார்த்து விட்டு அதிசயித்துப் போயிருக்கிறார். இந்தச் செய்தி ஊர் முழுதும் பரவி, ஊரே திரண்டு வந்து இந்த அதிசய மீனைப் பார்த்துச் சென்றிருக்கிறது. இந்தப் புகைப்படத்தைப் பத்திரமாக வைத்திருந்த முக்தீசுவரனின் தாத்தா, இறக்கும் முன்பாக, இந்தப் படம், பைனாகுலர், கேமரா, விசில் ஆகியவற்றை எல்லாம், இவரிடம் கொடுத்துப் பத்திரப்படுத்தச் சொல்லியிருக்கிறார். முக்தீசுவரன் அவர் தாத்தா அளித்த பொருட்களையும் காட்டினார். பின் போட்டோவில், கம்பீரமாகத் தெரிந்த அவரது தாத்தாவின் கைப்படத்தையும் காட்டினார். சில சமயங்களில், நம் கற்னையை விட, நேரில் பார்க்கும் அனுபவங்கள் விசித்திரமாக இருக்கின்றன. அதில் ஒன்று தான் கடல் கன்னியாகத் தோற்றம் கொண்ட அதிசய மீனின் புகைப்படம்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here