மனித உயிரானது வாழ்வில் பல கட்டங்களை கடந்து வந்தாலும், அதில் முக்கியமாக இரண்டு விடயங்கள் பிறப்பும், இறப்பும் தான்.இன்பம் துன்பம் என இரண்டும் ஏற்படும் வாழ்க்கையில் ஒருவர் துன்பம், சோகம், தனிமை, இழப்பு போன்றவற்றின் எல்லையை அடையும் போது அவரின் உயிர் மற்றும் மனம் ஆன்மீக மரணத்தை எதிர்கொள்கிறது.

ஒருவர் மனம் மற்றும் உயிரில் ஆன்மீக மரணம் நிகழவிருக்கிறது என்பதை வெளிகாட்டும் அறிகுறிகள் இதோ,

விரக்தி

வாழ்க்கையின் மீது பெரும் விரக்தியும், உங்களிடம் இருந்த அனைத்தும் இழந்துவிட்டது போன்ற நிலை இருக்கும்.

படுக்கையில் இருந்து எழுந்திருக்க கூட பிடிக்காது. யாராலும், எதனாலும் உங்களுக்கு உதவ முடியாது என கருதும் நிலை உங்கள் வாழ்வில் செயலற்ற பகுதியாக கருதலாம்

ஏற்று கொள்ளவில்லை என்ற எண்ணம்

உங்களுக்கு பிடித்த இடத்திலும், பிடித்த நபர்களுடனும் நீங்கள் இருக்கும் போது அவர்கள் உங்களை ஏற்று கொள்ளவில்லை என்ற எண்ணம் இருக்கும்.

யாருமே என்னை காண விரும்பாத நிலையில் நான் ஏன் அங்கு இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.

சிக்கிக்கொண்ட உணர்வு

Feeling blue

ஏதோ ஒரு வட்டத்திற்குள் சிக்கி கொண்டது போலவும், அதை விட்டு வெளிவர முடியாத நிலையில், உதவியற்று இருப்பது போலவும் உணர்வீர்கள்.

இது தான் கடைசி என்ற எண்ணம் நிலவும் நிலையில் அது உங்களை ஒரு இயலாமை சக்கரத்திற்குள் தள்ளிவிடும்.

சந்தேகம்

உங்களை நீங்களே சந்தேகப்பட்டு கொண்டும், உங்கள் கருத்துக்களை நீங்களே நம்பாமலும் இருப்பீர்கள்.

ஆகையால், உங்களுக்கு எது தேவையோ அதை மறந்து… வேண்டாததை எல்லாம் இழுத்துப் போட்டு கொண்டு யோசித்துக் கொண்டிருப்பீர்கள்

குழப்பம்

உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் இழுவையாக இருப்பது போலவும், ஏதோ ஒரு விடயம் தொலைந்து போனது போலவும் குழப்பமான சூழலை உணர்வீர்கள்.

ஆகையால், உங்களுக்கு எது தேவையோ அதை மறந்து… வேண்டாததை எல்லாம் இழுத்துப் போட்டு கொண்டு யோசித்துக் கொண்டிருப்பீர்கள்

தீய சூழல்

ஆன்மீக மரண தருணத்தை நெருங்கும் போது, நீங்கள் ஒரு தீய சுழலில் சிக்குவீர்கள். அதில் இருந்து மீண்டு வர முடியாது என்று கூட கருதலாம். அதைவிட்டு வெளிவருவது மிகவும் கடினம் என்று கருதுவீர்கள். ஆனால், இந்த சுழற்சிக்கு ஒரு முடிவு பிறக்கும். அதை தான் ஸ்பிரிச்சுவல் ரீபர்த் என்கிறார்கள்.

தூக்கம் போகும்

இப்படியான நிலையானது உங்கள் உறக்கத்தை கெடுக்கும். நிம்மதி எங்கே இருக்கிறது என்று புலம்புவீர்கள். யார் கருத்துகளையும் கேட்காமல் உங்கள் கருத்துக்கள் மட்டுமே உங்களுக்குள் எதிரொலிக்க செய்து அதனுள் ஆழ்ந்து போவீர்கள்.

மேலே கூறப்பட்ட அறிகுறிகள் உங்கள் வாழ்வின் முடிவை கூறுவதல்ல, நீங்கள் மீண்டும் பிறக்க போகிறீர்கள என்பதை உங்களுக்கு உணர்த்துகிறது.

உங்கள் வாழ்வில் புத்துயிர் பெற்று நிச்சயம் வெற்றிப் பாதைக்கு திரும்புவீர்கள்.இதன் மூலம் ஆன்மீக மறுபிறப்பு நிகழ்வதோடு, வாழ்க்கையும் நேர்மறையாக மாறும்

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here