உங்களுக்கு இருக்கின்ற கஷ்டம் இருந்த இடம் தெரியாமல் போக வேண்டும் என்றால், இதை மட்டும் தொடர்ந்து செய்து வாருங்கள்….அப்பறம் பாருங்கள் நீங்களும் கோடிஸ்வரர் தான்.செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியைத் தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமைகள் வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்குத் தேவையான பசும்பாலை வழங்கினால் பண வரவு உண்டாகும். பச்சை வளையலைத் தாயாருக்கு அணிவித்திட செல்வம் பெருகும்.

சுக்கிர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்க தனலாபம் கிடைக்கும். இதை வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபம் ஏற்றி, 11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும். மேலும், மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்கச் செல்வம் சேரும்.

தினந்தோறும் உங்களின் குல தெய்வத்தை காலையில் பிரார்த்தனை செய்து வர வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.

வியாழக்கிழமை மாலை 4 முதல் 5 மணி வரை உள்ள நேரம் குபேர காலமாகும். அதனால் இந்நேரத்தில் இல்லத்தில் குபேரனை வழிபட்டு வர பண வரவு அதிகரிக்கும்.

தாமரை திரி போட்டுக் குபேரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பண வரவு அதிகரிக்கும்.

அமாவாசையில் நம் முன்னோர்கள் இறந்த திதியில் தானம் செய்திட தனலாபம் உண்டாகும்.

வீட்டில் திருப்பதி வெங்கடாஜலபதியுடன் பத்மாவதி தாயார் உள்ள படத்தை வைத்து வழிபட்டு வந்தால் பண வரவு அதிகமாகும்.

சுத்தமான நீரில் வாசனைத் திரவியம் கலந்து இருவேளைகளிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி வீடு முழுவதும் தெளித்திட செல்வம் சேரும்.

கனகதாரா தோத்திரம் ஸ்ரீசுக்தம் படிப்பதன் மூலமும், அவரவர் நட்சத்திர மூலிகையை பணப்பெட்டியில் வைப்பதன் மூலமும் பண வரவுக் கூடும்.

ஓடும் வெள்ளைக்குதிரை, ஜோடி கழுதைப் படம் ஆகியவற்றை அடிக்கடி பார்த்து வர பண வரவு அதிகமாகும்.

வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்த்தால் பணத்தட்டுப்பாடு நீங்கும். ஆந்தையை வழிபட்டால் பண வரவு உண்டாகும் மற்றும் ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வந்தால் செல்வ வளம் அதிகரிக்கும்.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்து வந்தால் செல்வங்கள் பெருகும். மேற்கூறியவற்றை இடைவிடாது செய்து உங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here