அசைவ உணவு வகை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பொருட்களுள் ஒன்று.அசைவ உணவு பொருட்களில் அதிகப்படியான சக்திகள் மற்றும் புரதங்கள் இருப்பதால் உடல் வலிமை பெறுவதில் அசைவ உணவுகள் முக்கியபங்கு வகிக்கின்றன.பொதுவாக அசைவத்தை சாப்பிடுபவர்கள் உறுப்புகளை தனிதனியே அதிகம் விரும்பி சாப்பிடுவதில்லை. சதைப்பகுதியை சாப்பிடுவதையே விருப்பமாக கொண்டிருப்பார்கள்.

 

அதுவும் ஆடு, மாடு, பன்றி இறைச்சி, கோழி போன்றவற்றின் உறுப்புகளையே அதிகம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்போம். உண்மையில் சதைப்பகுதியை விட அவற்றின் மூளை, குடல் ஈரல், ஆகியவைகள் மிகவும் சத்துக்கள் உடையவை. எந்த உறுப்பு எந்த மாதிரியான நன்மைகள் தருகிறது என பார்க்கலாம்.

கல்லீரல் மல்டிவிட்டமின் அடங்கியது. நச்சுக்களை வெளியேற்றுகிறது. உறுப்பு இறைச்சிகளிலேயே அதிக சக்தியை கொண்ட சக்தி கோபுரமாக விளங்குகிறது.

மூளை மிகவும் நுட்பமானதாக இருக்கும். சிக்கலுடைய உறுப்பு என்றாலும் அதிக ஒமேகா3 அமினோ அமிலங்கள் நிரம்பியது.

மனிதனைப் போலவே மிருகங்களுக்கும் இர்ண்டு சிறு நீரகங்கள் உள்ளன. இவை நச்சுக்களையும் கழிவுகளையும் அகற்ற உதவுகிறது.

உறுப்புகளில் மிகவும் அதிகப்படியான இரும்புச் சத்து கொண்டிருக்கிறது. தாவரங்களில் இருப்பதை விட உறுப்பு இறைச்சிகளில் அதிகமாக இருக்கிறது.உறுப்பு இறைச்சிகளில் அதிக கொலைன் இருப்பதால் அவை மூளைக்கு தேவையான சக்தியையும் வலுவையும் தருகிறது.

ஆர்த்ரைடிஸ், கர்ப்பிணிகள் குறைவாக சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் இவை அதிக யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்வதால் ஆர்த்ரைடிஸ் இருப்பவர்களுக்கு வலியை உண்டாக்கும். மற்றபடி பெரிதான மைனஸ் பாயிண்டுகள் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here