பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் சங்கர்.தமிழ் சினிமாவை உலக அளவிற்கு எடுத்துசென்றவர் சங்கர்.தமிழ் சினிமாவில் விமர்சனத்துக்கும், கலாய்க்கப்படுதலுக்கும் அப்பாற்பட்ட ஆளுமைகள் சிலர் இருப்பார்கள். எம்மாம் பெரிய நடிகர், நடிகைகளும் இவர்களை சீண்டிப் பார்க்கவோ, கிண்டல் விடவோ மாட்டார்கள்.சினிமாவுக்கு வெளியிலிருக்கும் நபர்களும், சினிமாவிலிருந்து வெளியே இருக்கும் நபர்கள் வேண்டுமானால் இந்த ஆளுமைகள் மீது பாய்வார்களே தவிர உள்ளேயிருந்து விமர்சனங்கள் வராது.

அப்பேர்ப்பட்ட ஆளுமைகளில் ஒருவர்தான் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். இந்நிலையில் இப்போது சந்தடிசாக்கில் ஹீரோ ஒருவர் ஷங்கரை போகிறபோக்கில் கலாய்த்திருக்கிறார்.அது யார் தெரியுமா நம்ம தனி ஒருவன் ஜெயம் ரவிதான்.

டிக்! டிக்! டிக்! படத்தின் ப்ரமோஷனுக்காக விஜய் டி.வி. பேட்டியிலிருந்தார்கள் ஜெயம்ரவியும், ஹீரோயின் நிவேதா பெத்துராஜும்.அப்பட அனுபவத்தை பற்றி பேட்டியாளர் டி.டி. வரிசையாக கேட்டுக் கொண்டிருக்க ரவி விளக்கிக் கொண்டே இருந்தார். அப்போது அப்படத்தின் செட்டுக்களைப் பற்றி பேச்சு வந்தது.

“இந்த படத்துகான செட் ரொம்ப வித்தியாசமானது. வேற படத்துக்கான செட்டை கொஞ்சம் மாத்தியமைச்செல்லாம் இதுக்கு படம் பிடிக்க முடியாது.” என்று ஒரு போடுபோட்டார்.

இதைத்தான் ஷங்கரை ஆன் தி வேயில் ஜெயம் ரவி கலாய்த்திருக்கிறார் என்கிறார்கள் கோடம்பாக்க துணை இயக்குந குருவிகள். இதற்கு விளக்கம் சொல்பவர்கள் ”ஜெயம்ரவியோட அண்ணன் மோகன் ராஜா தன்னோட ‘வேலைக்காரன்’ படத்துக்காக போட்டிருந்த குடிசைப்பகுதி செட்டை அப்படியே தன்னுடைய ‘இந்தியன் -2’ படத்துக்காக சில கோடிகள் கொடுத்து வாங்கிய ஷங்கர், சில மாற்றங்கள் செய்து பயன்படுத்தப்போறார்.

இவ்வாறு ஜெயம் ரவி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு உலகத்தரம் வாய்ந்த இயக்குனர் ஒருவரை போகிற போக்கில் கலாய்த்து விட்டிருப்பது சமூக வலைதளங்களில் தீயாய் பரவிவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here