இனிய வணக்கங்கள். இன்றைய செவ்வாய்கிழமை நல்ல நாளில், நல்லதொரு தை நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

சுய நலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதித்து பேசியவரும் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடு விலகும். ஆதாயம் அதிகரிக்கும். பெண்களுக்கு இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேறும். வாகன வகையில் செலவு வரும்.

ரிஷபம்:

நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாரான அளவில் இருக்கும். பணியாளர்கள் திட்டமிட்டு செயல்படுவர். பெண்களுக்கு பிள்ளைகளின் வழியில் செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மிதுனம்:

முற்போக்கு சிந்தனையுடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை தரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். உபரி வருமானம் கிடைக்கும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கடகம்:

உங்களின் நியாயமான பேச்சு சிலருக்கு சங்கடம் தரலாம். தொழில், வியாபாரம் அதிக உழைப்பால் வளர்ச்சி பெறும். நிலுவைப்பணம் வசூலாகும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.

சிம்மம்:

தனித் திறமையுடன் செயல்பட்டு வருவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறு மறையும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் அளவில் பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.

கன்னி:

பொதுநல நோக்கால் நற்பெயர் காண்பீர்கள். முக்கியஸ்தரின் அறிமுககும், நட்பும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

துலாம்:

குடும்பத்தினரால் சிரமத்திற்கு ஆளாகலாம். நண்பரின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பெண்கள் கணவரின் சொல்லுக்கு கட்டுப்படுவர். பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

விருச்சிகம்:

எதிலும் முன்னேற்பாடுடன் செயல்படுவது அவசியம். தொழிலில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். சீரான ஓய்வு உடல்நலனை பாதுகாக்க உதவும். நண்பரால் உதவி கிடைக்கும்.

தனுசு:

நேர்மை எண்ணம் மனதில் அதிகரிக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் சீராகும். பணியாளர்கள் சலுகை பெறுவர். குழந்தைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மகரம்:

வாழ்வு வளம் பெற புதிய வாய்ப்பு உருவாகும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு நடத்த திட்டமிடுவீர்கள்.

கும்பம்:

உறவினர் வகையில் அதிருப்தி ஏற்படலாம். பேசுவதில் நிதானம் பின்பற்ற வேண்டும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது. பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்குவர். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம்.

மீனம்:

தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழிலில் முயற்சிக்கேற்ப வருமானம் கிடைக்க பெறுவீர்கள். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here