இனிய வணக்கங்கள். இன்றைய திங்கள்கிழமை நல்ல நாளில், நல்லதொரு தை நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

நற்செயலுக்கான நற்பலன் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

ரிஷபம்:

அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகலாம். நிர்ப்பந்தத்தின் பேரில் கடன் வாங்க வேண்டாம். இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

மிதுனம்:

குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி விலகும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் மனம் விரும்பிய வகையில் சுப செலவு செய்து மகிழ்வீர்கள்.

கடகம்:

மற்றவர் விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரம் தொடர்பாக யாரிடமும் சச்சரவு பேச வேண்டாம். லாபம் சுமாராக இருக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் உண்டாகும். நண்பரால் உதவி உண்டு.

சிம்மம்:

திறமையை வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். தாமதமான பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு முன்னேற்றம் பெறும். பணியாளர்கள் சலுகை பெறுவர். குழந்தைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கன்னி:

நீண்ட நாட்களாக இருந்த இடையூறு விலகும். தொழில், வியாபாரம் அபரிமிதமான முன்னேற்றம் பெறும். ஆதாய பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு நற்பெயர் உண்டாகும். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.

துலாம்:

பெரியவர்களின் ஆலோசனையை ஏற்று நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரம் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.

விருச்சிகம்:

இஷ்ட தெய்வ அருளால் நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். நண்பரால் உதவி உண்டு.

தனுசு:

மனதில் நல்ல எண்ணம் மேலோங்கும். உறவினரிடம் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மகரம்:

தாமதித்த பணி கூட எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். லாபம் படிப்படியாக உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டை பெறுவர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

கும்பம்:

பிறர் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். ஆரோக்யத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம்.

மீனம்:

இடையூறு செய்பவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி ஏற்படலாம். பணவரவு சுமாராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. குழந்தைகளின் நற்செயல் ஆறுதல் தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here