இனிய வணக்கங்கள். இன்றைய சனிக்கிழமை நல்ல நாளில், நல்லதொரு தை நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

நற்பெயரை காப்பதி்ல் கூடுதல் கவனம் கொள்வீர்கள். குடும்பத்தினர் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை இருக்கும். லாபம் சுமார். பெண்கள் பயன்தராத பொருட்களை வாங்க வேண்டாம்.

ரிஷபம்:

வெகுநாள் குழப்பம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும். ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்க பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர் குழந்தைகளின் நற்செயல் பெருமையை தேடித் தரும்.

மிதுனம்:

குடும்பத்தினர் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். உடல் ஆரோக்கியத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம். நண்பரால் உதவி உண்டு.

கடகம்:

பணிகளை கூடுதல் ஆர்வமுடன் செய்வீர்கள். நண்பர் வழியில் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளர கூடுதல் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும்.

சிம்மம்:

புதிய வாய்ப்பால் தகுதியை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். பணவரவு அதிகரிக்கும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

கன்னி:

திறமையை வெளிப்படுத்தி நற்பெயர் பெறுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். வருமானம் மிதமாக கிடைக்கும். உறவினர் வகையில் திடீர் செலவு ஏற்படலாம். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

துலாம்:

நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் சீரான முன்னேற்றம் பெறும். சேமிக்கும் விதத்தி்ல் லாபம் கிடைக்கும். சீரான ஓய்வு ஆரோக்கியத்தை பாதுகாக்கும். பெண்கள் கணவரின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்வர்.

விருச்சிகம்:

மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும். உறவினர், நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். சேமிக்கும் விதத்தில் லாபம் அதிகரிக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு:

லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

மகரம்:

செயல்களில் நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். மிதமான லாபம் கிடைக்கும். வீட்டுச்செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.

கும்பம்:

எதிரியால் இடையூறு குறுக்கிடலாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதிக்கு வழிவகுக்கும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவி கிடைக்கும்.

மீனம்:

கடந்த கால உழைப்பின் பயனை பெறுவீர்கள். இஷ்ட தெய்வ அருளால் தொழில், வியாபாரம் செழிக்கும். லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here