இனிய வணக்கங்கள். இன்றைய வெள்ளிக்கிழமை  நல்ல நாளில், நல்லதொரு மாசி நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

பயன் தராத விஷயங்கள் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சுமாராக இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். தியானம், தெய்வ வழிபாடு அமைதிக்கு வழிவகுக்கும்.

ரிஷபம்:

பேச்சு, செயலில் வசீகரம் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். மாமன், மைத்துனருக்கு உதவுவீர்கள். பெண்கள் பிள்ளைகளின் நற்செயலால் பெருமை கொள்வர்.

மிதுனம்:

சுயதேவையை நிறைவேற்ற ஆர்வம் கொள்வீர்கள். முக்கியமான விஷயம் மறந்து போகலாம். தொழில், வியாபாரத்தில் நிதானம் பின்பற்றுவது நல்லது. குடும்பத்திற்கான செலவு அதிகரிக்கும்.கண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை.

கடகம்:

முன்யோசனையுடன் செயல்பட்டு வருவீர்கள். திட்டமிட்ட செயல் இலகுவாக நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியால் பெருமிதம் கொள்வீர்கள். ஆதாயம் உயரும். அரசியல்வாதிகளுக்கு விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும்.

சிம்மம்:

வசீகர பேச்சால் பிறரை கவர்வீர்கள். எதிரியால் இருந்த தொல்லை குறையும். தொழில், வியாபார வளர்ச்சியால் நன்மை காண்பீர்கள். நிலுவை பணம் வசூலாகும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். நண்பரால் உதவி உண்டு.

கன்னி:

உங்கள் மனதில் சோம்பல் குணம் ஏற்படலாம். முக்கியமான பணிகளை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள சிரமம் பிறரிடம் விவாதிக்க வேண்டாம். வெளியூர் பயணத்தில் மாறுதல் செய்வீர்கள். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.

துலாம்:

எதிர்மறையாக பேசுபவர்களிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நேரம் தவறாமையை பின்பற்றுவது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் திடீர் செலவு ஏற்படலாம். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

விருச்சிகம்:

மனதில் தெய்வீக சிந்தனை வளரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு எளிதில் நிறைவேறும். கூடுதல் வருமானத்தால் வாழ்க்கைத் தரம் உயரும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். சுபசெய்தி வந்து சேரும்.

தனுசு:

பேச்சு, செயலில் நேர்மை நிறைந்திருக்கும். நண்பரிடம் பெற்ற உதவிக்கு நன்றி சொல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திருப்திகரமான வளர்ச்சி உருவாகும். வருமானம் அதிகரிக்கும். கூடுதல் சொத்து சேர்க்கை உண்டாகும்.

மகரம்:

பணிகளை கூடுதல் கவனமுடன் நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். குடும்பத்தின் பணத்தேவை அதிகரிக்கும். மனைவிவழி உறவினரால் நன்மை உண்டாகும்.

கும்பம்:

எதிர்மறை எண்ணம் உள்ளவர்களிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். லாபம் சீராக இருக்கும். வாகன பாதுகாப்பில் தகுந்த கவனம் தேவை.

மீனம்:

மனம், செயலில் உற்சாகம் நிறைந்திருக்கும். நண்பர்களிடம் கலை உணர்வுடன் பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேறும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here