இனிய வணக்கங்கள். இன்றைய வியாழக்கிழமை  நல்ல நாளில், நல்லதொரு மாசி நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

செயல்களில் நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பால் வருமானம் கூடும். வெகுநாள் விரும்பிய பொருள் வாங்குவீர்கள். பெண்கள் குடும்பநலனில் கவனம் செலுத்துவர். நண்பரால் உதவி உண்டு.

ரிஷபம்:

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முயல்வீர்கள். தொழில், வியாபார நடைமுறை சீராக, புதிய உத்தியை பயன்படுத்துவது நல்லது. மிதமான அளவில் பணவரவு இருக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் செய்வீர்கள்.

மிதுனம்:

உங்கள் செயலில் அறிவுத்திறமை பளிச்சிடும். திட்டமிட்ட பணி எளிதில் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை உருவாகும். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

கடகம்:

மனதில் கலை உணர்வு அதிகரிக்கும். அலைக்கழிப்பு உருவாக்கிய வேலை, ஆதாயம் தருவதாக மாறும். தொழில், வியாபாரத்தின் வளர்ச்சி கண்டு பிறர் வியப்படைவர். உபரி வருமானம் கிடைக்கும். இயலாதவர்களுக்கு உதவுவீர்கள்.

சிம்மம்:

உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். வாகன போக்குவரத்தில் மிதவேகம் நல்லது.

கன்னி:

மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்ய கூடுதல் பணம் தேவைப்படும். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் சீராகும். பெண்கள் பணம், நகை இரவல், கொடுக்க வாங்க கூடாது.

துலாம்:

உங்கள் பேச்சில் அன்பும், பண்பும் மிகுந்திருக்கும். நண்பர், உறவினர் உங்களை மதிப்புடன் நடத்துவர். தொழில், வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு நகை புத்தாடை வாங்க யோகமுண்டு.

விருச்சிகம்:

செயல்களில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும். பழகுபவர்களின் மனம் அறிந்து பேசுவீர்கள். தொழில், வியாபார வளாச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். லாபம் உயரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். பணியாளர்களுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.

தனுசு:

எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். குடும்பத்தினர்களிடம் வாக்குவாதம் செய்ய நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை தொந்தரவு தரலாம். லாபம் சுமார். புதிய இனங்களில் செலவு அதிகரிக்கும்.

மகரம்:

சிலரது அதிருப்தியை பெறும் சூழ்நிலை வரலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற நவீன மாற்றம் செய்வது அவசியம். ஆதாயம் சீராக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.

கும்பம்:

தாமதமான செயல் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வருமானம் பன்மடங்கு பெருகும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும்.

மீனம்:

மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இடையூறை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. மிதமான பணவரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்க கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here