இனிய வணக்கங்கள். இன்றைய புதன்கிழமை நல்ல நாளில், நல்லதொரு மாசி நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

பேச்சு, செயலில் விவேகம் நிறைந்திருக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். சேமி்க்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

ரிஷபம்:

குடும்ப சிரமம் பிறரிடம் சொல்ல வேண்டாம். கஷ்ட சூழல் மெல்ல மெல்ல சரியாகும். தொழில் வியாபாரத்தில் அனுகூலம் பாதுகாக்க வேண்டும். சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

மிதுனம்:

உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி பாராட்டுவார். தொழில், வியாபாரம் செழிக்க விடாமுயற்சியுடன் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர்.குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி வளரும்.

கடகம்:

நல்லோரின் நட்பு எளிதாக கிடைக்கும். புதிய வளர்ச்சி திட்டம் குறித்து பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். ஆதாயம் அதிகரிக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். உறவினர்களால் உதவி உண்டு.

சிம்மம்:

உங்களை சிலர் குறை சொல்ல காத்திருப்பர். செயல்களில் சுறுசுறுப்பு பின்பற்றுவது அவசியம்.தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். திடீர் செலவால் சேமிப்பு கரையும். பிள்ளைகளின் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

கன்னி:

உங்கள் செயல்களில் கவனச் சிதறல் ஏற்படலாம்.மனைவியின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாரான அளவில் இருக்கும். சகோதரவழியில் செலவு ஏற்படலாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

துலாம்:

மனதில் தைரியம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். லாபம் படிப்படியாக உயரும். கடனில் ஒருபகுதி செலுத்துவீர்கள். பெண்களுக்கு இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும். உடல்நலனில் அக்கறை தேவை.

விருச்சிகம்:

எந்த செயலையும் சவாலாக அணுகுவீர்கள். கடந்த காலத்தில் திகைப்பு தந்த பணி, எளிதாக நிறைவேறும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாகும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து, பாராட்டு வெகுமதி பெறுவர்.

தனுசு:

சிலர் பொறாமை குணத்தால் பரிகாசம் செய்வர். அளவுடன் பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேற தாமதமாகலாம். மிதமான பணவரவு கிடைக்கும். எவருக்கும் தகுதிக்கு மீறிய வாக்குறுதி தர வேண்டாம்.

மகரம்:

இடையூறு செய்பவரை அறிந்து விலகுவீர்கள். சொந்தப்பணியில் மட்டும் ஈடுபடுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி இருக்கும். சராசரி பணவரவு கிடைக்கும். அரசு அனுகூலம் பெற கூடுதல் முயற்சி தேவைப்படும்.

கும்பம்:

பேச்சில் அன்பும், பண்பும் மிகுந்திருக்கும். நண்பர், உறவினர் உங்களை மதிப்புடன் நடத்துவர். தொழில், வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்களுக்கு பொன், பொருள் சேர யோகமுண்டு.

மீனம்:

பணிகளில் திடீர் சிரமம் உருவாகலாம் கவனம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். சீரான ஓய்வு ஆரோக்கியம் தரும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here